மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 12 ஜூன், 2021

தலை - ஒற்றைத் தலைவலி (Megrim)

01.  இலவங்கப் பட்டைப் பொடி மஞ்சள் பொடி இரண்டையும் கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால்  ஒற்றைத் தலைவலி நிரந்தரமாக நீங்கிவிடும்

02.  எட்டி மரக் கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டுக் கொதிக்க வைத்து தலைக்குக் குளித்து வர ஒற்றைத் தலைவலி நீங்கும்.(403)

03.  ஓம எண்ணை சிறிதளவு எடுத்து  மூட்டுவலி, மார்ச்சளி, ஒற்றைத்  தலைவலி உள்ள இடங்களில் தடவலாம்.

04.  குப்பைமேனி இலைகள் ஒரு பிடி, தும்பை இலைகள் ஒரு பிடி இரண்டையும் உள்ளங்கையில் வைத்து, ஐந்தாறு மிளகை எடுத்துத் தூள் செய்து அதையும் இலைகளுடன் சேர்த்து, சிறிது உப்பினையும் அதனுடன் சேர்த்து ஒன்றாகக் கசக்க வேண்டும். அந்தச் சாறினை, தலைவலி இடது பக்கம் இருந்தால் அதற்கு எதிர்ப்புறம் அதாவது வலது புற மூக்கில் ஏழெட்டு சொட்டுகள் விடவேண்டும்.  மருந்தினை மூக்கில் விட்ட உடனேயே எழுந்து தரையைப் பார்த்து குனிந்து கொள்ளவேண்டும். மூக்கிலிருந்து சளியும் இலைச் சாறும் கீழே ஒழுகும். மூக்கைச் சிந்தக் கூடாது. தும்மல் வந்தால் தும்மலாம். பத்து நிமிடம் கழித்துமூக்கினைத் துடைக்கலாம். மிளகு ரசம் வைத்து சோறு உண்ண வேண்டும். இரவிலும் அதே உணவு தான். மறு நாள் காலை குளிக்கக் கூடாது.) இவ்வாறு செய்தால் ஒற்றைத் தலைவலி விலகிவிடும். (ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மாஎன்னும் நூல். பக்கம் 18 - 21)

05.  குப்பைமேனி மருத்துவத்திற்கு வேறு பத்தியம் இல்லை. ஆனால் 7 நாட்களுக்கு தலை குளிக்கக் கூடாது. அவ்வளவுதான். ஒற்றைத் தலைவலி நிரந்தரமாக நீங்கி விடும். ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மாஎன்னும் நூல். பக்கம் 18 - 21)

06.  குப்பைமேனி மருந்து விட்ட இரண்டாம் நாள் மாலை, முதல் நாள் காலையில் வலப்பக்கம் மூக்கில் சாறு விட்டது போலவே, [அப்போதைக்கப்போது சாறு தயரித்து] இடப்பக்க மூக்கில் ஏழெட்டு சொட்டுகள் விட வேண்டும்.  சாறு விட்டவுடன்முதல் நாள் செய்தது போலவே செய்ய வேண்டும். அடுத்த நாளிலிருந்து ஒற்றைத் தலைவலி காணாமற் போய்விடும். (ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மாஎன்னும் நூல். பக்கம் 18 - 21)

07.  சுண்டைக்காய் வேர்ப்பட்டையைப் பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க  வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கில் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் ஆகியவை போகும்.

08.  தும்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலை முழுகி வர, தலைப் பாரம், ஒற்றைத் தலை வலி, நீரேற்றம், மூக்கடைப்பு நீங்கும்

09.  தேத்தாங் கொட்டையுடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து, தாய்ப் பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட, ஒற்றைத் தலைவலி குணமாகும்.(405)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )29]

{12-06-2021}

==========================================================

தசை - வீக்கம் (Turgid Muscle)

01.  நொச்சி இலைகளைப் பறித்து, இடித்து சாறு பிழிந்து அச்  சாறினை வீக்கம் உள்ள தசை மீது  பூசி வந்தால் தசை வீக்கம் குணமாகும்.(303)

02.  ஓமத்தை நீர் விட்டு அரைத்து, களி போல் கிளறிஇளஞ்சூட்டில் வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டால், தசை வீக்கம் குணமாகும்.(305)

03.  பூவரசு இலைகளை அரைத்து வதக்கி வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் தசை வீக்கம் குணமாகும்.(1021)