மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

வேர்க்குரு (Prickly Heat)

01.   எலுமிச்சம் பழச் சாறில் சந்தனம் கலந்து உடம்பில் பூசி வந்தால் வேர்க்குரு மறையும்.(1286)

 

02.   சந்தனப் பொடியில் எலுமிச்சம் பழச் சாறினைக் கலந்து உடம்பில் பூசி வந்தால், வேர்க்குரு மறையும்.(1286)

 

03.   சோறு வடித்த கஞ்சியை எடுத்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால் இரண்டே நாளில் அவை மறைந்து விடும்.(1157)

 

04.   பப்பாளிப் பாலை வெங்காயச் சாறுடன் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வந்தால், வேர்க்குரு மறைந்து விடும்.  (1034) (2004)

 

05.   பப்பாளிப் பாலை வெண்காரத்துடன் கலந்து தடவி வந்தாலும் வேர்க்குரு சரியாகிவிடும். (1036)

 

06.   வெங்காயச் சாறை வேர்க்குரு மீது தடவி வந்தால், அவை மறையும். உடலும் குளிர்ச்சி பெறும்.  (781)

  ================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

=================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


வெள்ளை படுதல் (Gonorrhea)

 

01.   அத்திப் பிஞ்சையும் காயையும் சமைத்து உண்ணலாம். இவ்வாறு உண்டு வந்தால் வெள்ளை, வாத நோய், சூலை, உடல் வெப்பு, புண் ஆகியவை போகும்

 

02.   அன்னாசிப் பழத் துண்டுகள் சிலவற்றை  தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வெள்ளை படுதல் குணமாகும். (604)

 

03.   அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்துப்பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும். நீரிழிவு நோய் தீரும். ஆண்மை பெருகும்.

 

04.   அவரி வேர் 20 கிராம், பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.

 

05.   அறுகம் புல் ஒரு கைப்பிடி எடுத்து தயிரில் அரைத்துக் கலந்துகொடுக்க தணியாத வெள்ளை நோய் குணமாகும்.

 

06.   ஆலமரப் பட்டை, வேர்ப் பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் எடுத்து, சிதைத்து, இரண்டு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சிதினந்தோறும் காலை மாலை குடித்துவர மேக எரிச்சல், மேகப் புண், மேக ஒழுக்கு ( white discharge) தீரும்.(613)

 

07.   ஆவாரம் பூவைக் கசாயம் வைத்து, அதில் கருப்பட்டி சேர்த்து பாகு பதத்தில் எடுத்துக் கொண்டு, தினசரி 2 வேளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வந்தால் வெள்ளை படுதல் நீங்கும்.

 

08.   ஆவாரம் பூவைக் கசாயம் வைத்து, பெண்கள் அருந்தி வந்தால், வெள்ளைபடுதல், நீங்கிக் குணம் பெறலாம்.

 

09.   ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து, பொடித்து, 2 முதல் 4 கிராம் வரை தினசரி தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வெள்ளை படுதல், எலும்பைப் பற்றிய சுரம் ஆகியவை குணமாகும்.

 

10.   கழற்சிக்காய்ப் பொடி கால் தேக்கரண்டி, சிறிதளவு மிளகுப் பொடி இரண்டையும் மோரில் கலந்து  வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வரவும். பெண்களுக்கு மாத விலக்குப் பிரச்சினை கட்டுப்படும்; அதிக இரத்தப் போக்கு, வெள்ளைப் போக்கு, நீர்க்கட்டி அகலும்.

 

11.   கற்றாழை மடலை (சோற்றுக் கற்றாழை) நீளவாக்கில் பிளந்து, அதில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை வைத்து மூடி, நூலால் கட்டி கூரை மீது இரவு நேரத்தில் வைத்து விட வேண்டும். பகலில் எடுத்து வீட்டிற்குள் வைக்க வேண்டும். இவ்வாறு 3 நாள் செய்தால், வெந்தயம் முளை கட்டி இருக்கும். இந்த வெந்தயத்தை 3 பாகமாக்கி, 3 தினங்கள் சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளை நோய் மாயமாய் மறையும்.

 

12.   கானவாழை இலையுடன் சம அளவு கீழாநெல்லி மையாய் அரைத்துத் தயிரில் நெல்லிக்காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்

 

13.   கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள  பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

 

14.   கொள்ளை எடுத்து இரவில் ஊற வைத்து, காலையில் அந்த நீரினைக் கொதிக்க வைத்து மூன்று வேளையும் 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

 

15.   கொன்றைப் பூவை, தனியாகவோ, கொழுந்துடன் சேர்த்தோ அரைத்து பாலில் கலக்கி உண்டால் வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை குணமாகும். 

 

16.   சிறுநெருஞ்சில் காயையும் வேரையும் பச்சரிசியோடு வேகவைத்து கஞ்சியை வடித்துச் சர்க்கரை கூட்டி, வெள்ளை, நீர்க்கடுப்பு ஆகியவைகளுக்குக் கொடுப்பதுண்டு.

 

17.   சிறு செருப்படை இலைச் சாறு, வெங்காயச் சாறு ஆகியவை சம அளவு கலந்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, நன்கு வடிகட்டி, காலை மாலை குடித்து வந்தால் இரண்டொரு முறை பேதியாகும். இதனால் சிரங்கு, வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும். (620)

 

 

18.   சீரகம் சிறிதளவு எடுத்து அத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, பசும் பாலில் கலந்து குடித்து வரும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் சரியாகும்.

 

19.   செம்பருத்தி மலரை பெண்கள் உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள்  நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

 

20.   திப்பிலி மற்றும் தேற்றான் விதையை நன்கு பொடித்து அதைக் கழுநீரில் 3 – 4 கிராம் அளவு கலந்து மூன்று நாட்கள் தர வெள்ளை மற்றும் பெரும்பாடு  குணமாகும்.

 

21.   துத்தி விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் . வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் குணம் அடைவார்கள்.

 

22.   துளசிச் சாறு 2 தேக்கரண்டி எடுத்து சோறு வடித்த நீரில் கலந்து தினமும் கொடுத்து வந்தால் வெள்ளைபடுதலுக்கு, சிறந்த நிவாரணியாக அமையும்.

 

23.   பசலைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் பெண்களுக்கு வெள்ள படுதல் நீங்கும்.  (605)

 

24.   பிண்ணாக்குக் கீரையை பருப்புடன் சமைத்து நெய்யுடன் சோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் உட்சூடு, வெள்ளை, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.(093)

 

25.   பெருநெருஞ்சில் இலை 50  கிராம், அவரி வேர் 20 கிராம், இரண்டையும் அரைத்து எலுமிச்சங் காய் அளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்து வந்தால் , வெள்ளைபடுதல் குணமாகும்.  (608)

 

26.   பொடுதலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து, ஒரு கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் கலக்கிக் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் வெள்ளை படுதல், வெட்டைச் சூடு ஆகியவை தீரும். (1503) 

 

27.       மாசிக்காய்ப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, பால் சேர்த்துக் குடித்து வரலாம். வாய்ப்புண், தொண்டைப்புண், இரத்த மூலம், உதிரப் போக்கு,வெள்ளைபடுதல் ஆகியவை கட்டுப்படும்.

 

28.   வாழை மரத்தின் இளம் பூவைப் புட்டிட்டுச் சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க பெரும் பாடு தீரும்; வெள்ளைப் படுதலும் நீங்கும்.

 

29.   வாழைப் பூவுக்கு  வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும் குணமுண்டு. அத்துடன் ஆண்மை தரும்.

 

30.   வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகும்.

 

31.   விளா மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும்.

 

32.   விளாம் பிசினை உலர்த்தி, தூள் செய்து, காலை மாலை  தலா ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு, மங்கையருக்கு வெள்ளைப் படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு இரணம், மாதவிடாய்  இம்சை ஆகியவை தீரும். உப்பு இல்லாப் பத்தியம் தேவை.

 

33.   வெந்தயப் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு வாரம் காலை மாலையில் வெந்நீருடன் உட்கொள்ளும் பெண்களுக்கு வெள்ளைப் படுதல் சரியாகும்.

 

34.   வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்குகாய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மி.லி அளவு எடுத்து அதை 100 மி.லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடல் வெப்பம் தணியும். இரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும்.வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்

  ===================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்  .வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===============================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,மடங்கல்(ஆவணி)20]

{05-09-2021}

==========================================================================