மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “அ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2021

ஓடுதல் - களைப்பே இன்றி. (Running without weariness)

01.   விபூதிப்பத்திரி (திருநீற்றுப் பச்சிலை) இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். அதில் ஒரு பகுதியை வாயில் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒடினால் களைப்பே தெரியாது. ஓடிக்கொண்டே இருக்கலாம். (ஆதாரம்: “ நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல், பக்கம் 212)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

ஒவ்வாமை (Allergy)

01.  சிறுகுறிஞ்சான் வேர்ப் பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு நஞ்சினால் ஏற்படும் ஒவ்வாமையை நீக்கும்.

02.  சுக்குடன் வெந்தயம் சேர்த்து, பொடித்து, தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால் ஒவ்வாமை (அலர்ஜி) நீங்கும்.

03.  தொட்டாற் சுருங்கி இலைச் சாறு எடுத்து தடவினால் ஒவ்வாமை, தோல் தடிப்புகள் சரியாகும்

04.  நாயுருவி வேர்க் கசாயம் அல்லது இலைச் சாறு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஒவ்வாமையால் வரும் இருமல் தீரும்.

05.  வேப்பங் கொழுந்து துளசி இலை சேர்த்து அரைத்து தினமும் காலையில் சுண்டைக் காய் அளவு சாப்பிட்டு வந்தால்  ஒவ்வாமை (அலர்ஜி) குணமாகும்.  (1018)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

ஒரே நேரத்தில் ஒரு குடம் நீர் குடித்தல். (Drinking potful of Water)

01.   சிறு பீளைச் செடியின் வேர் அரைக் கைப்பிடி, குப்பைமேனிச் செடியின் வேர் அரைக் கைப்பிடி இரண்டையும் வாயில் போட்டு மென்று தாடையில் அடக்கிக் கொண்டால் ஒரு குடம் என்ன அதற்கு மேலும் ஒரே தடவையில் தண்ணீர் குடிக்கலாம். (ஆதாரம் :”நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல், பக்கம் 211)

========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளி=ய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

எண்ணெய் வகைகள் (மருத்துவம்) (Medicinal Oils)

       குமரி எண்ணெய்

 01.   விளக்கெண்ணெய் ஒரு கிலோ, 10 முறை கழுவிய சோற்றுக் கற்றாழைச் சோறு ஒரு கிலோ, பனங்கற்கண்டு அரைக் கிலோ, வெள்ளை வெங்காயச் சாறு அரைக் கிலோ ஆகியவற்றைக் கலந்து நீர் சுண்டக் காய்ச்சினால் கிடைக்கும் எண்ணெய்க்குப் பெயர்  குமரி எண்ணெய். ( சோற்றுக் கற்றாழைக்குக் குமரி என்றும் ஒரு பெயர் உண்டு ).இந்த எண்ணெயைத் தயாரித்துப் புட்டியில் அடைத்து வைத்துகொண்டு தேவைப் படும் போது பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும்  கொடுத்தால் மலச் சிக்கல் தீரும்.

      தாழம்பூ எண்ணெய்

01.   தாழம் பூவிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இதைத் தலைவலி, உடல்வலி முதலியவைகளுக்கு மேலுக்குத் தடவலாம். இதைக் காது வலிக்கும் இரண்டொரு துளி விடலாம்.

        தான்றி எண்ணெய்

01.   தான்றிக்காய் எண்ணெய் தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

         புன்னை எண்ணெய்

01.  புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம், முன் இசிவு, பின் இசிவு, கிருமி ரணம், சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

எலும்பு முறிவு (Bone Fracture)

01.  துத்தி இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும். (எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு அதன் பின் துத்தி இலை வைத்தியம் தொடங்க வேண்டும்)

02.  பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாகக்  காலை மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும். (1451) (Harish)

03.  பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட்டால், சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும்.

04.  பிரண்டைத் துண்டுகளை நெருப்பில் வாட்டி எடுத்து, சாறு பிழிந்து, அத்துடன் மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் குழம்புப் பதத்தில் கிளறி , அடிபட்ட வீக்கம், சதைப் பிடிப்பு, சுளுக்கு, எலும்பு முறிவு ஆகியவற்றிற்குப் பற்றுப்போட நல்ல பலன்கிடைக்கும்.