மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “த” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

தோல் - வெண் புள்ளிகள் (white patches)

01.  அவரிவேர்ப் பட்டையை வெந்நீர் விட்டு அரைத்து சுண்டைக் காயளவு உள்ளுக்கும் சாப்பிட்டு, மீதமுள்ளதை வெண்புள்ளிகள் மீதும் தடவி வந்தால், 20 – 100 நாட்களில் வெண்புள்ளிகள் தீரும்.

02.  ஈஸ்வரமூலி வேரைத் தேனில் அரைத்து ஒரு கிராம் அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் குணமாகும்.(563)

03.  கண்டங்கத்தரிப் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவுக்கு 5-க்கு ஒன்று எள் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கடுகு திரள வடித்து வைத்துக் கொண்டு வெண் புள்ளிகள்  மீது பூசி வர, வெண்மை மறைந்து உடல் நிறமடையும்.

04.  கண்டங்கத்தரிப் பழத்தை வேகவைத்து நன்றாக மசித்து வடிகட்டி, அதனுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் தடவி வந்தால் வெண்புள்ளிகள் மறையும்.

05.  கார்போகரிசி  விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும் யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண் குஷ்டம், குஷ்டம், "AIDS" க்கும் நல்ல மருந்தாகப்  பயன்படுகிறது. 

06.  குன்றிமணிச் சாறுடன் வெண்கொடி வேலன் வேரும் சேர்த்து  அரைத்து அதனை வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை மறையும்.(774) (1010)

07.  கொன்றை வேர்ப் பட்டை, கொன்றை மரப் பட்டை, வில்வப் பழ ஓடு ஆகியவற்றின்   சூரணம் சமனளவு கலந்து   அரைத் தேக்கரண்டி எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ஓரிரு மண்டலத்தில் வெண்மேகம் தீரும். தேங்காய் எண்ணெயில் கலந்து வெண்புள்ளிகள் மீதும் பூசலாம்.

08.  சந்தனக் கட்டையை  எலுமிச்சம் பழச் சாற்றில் உரைத்துப் பூசிவந்தால், வெண்புள்ளிகள் தீரும்.

09.  துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.

10.  துத்தி விதைச் சூரணம் ஐந்து கிராம், கற்கண்டுப் பொடி ஐந்து  கிராம், தேனில் கலந்து உட்கொண்டு வந்தால், வெண்புள்ளிகள்  தீரும்.

11.  நிலப்பனைக் கிழங்கின் மேல் தோலையும் உள் நரம்பையும் போக்கி, உலர்த்திப் பொடித்து 5 கிராம் பொடியுடன் சர்க்கரை கூட்டிப் பாலுடன் கலந்து, காலை மாலை உட்கொள்ள வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

12.  பூவரசு மரத்தின் முதிர்ந்த பட்டையின் சதையைச் சிதைத்துப் பிழிந்த சாற்றை வாயிலிட்டுக் கொப்பளித்துக் கொண்டே விழுங்கிவிடின் கழிச்சலை உண்டாக்கும். இவ்வாறே  பல நாட்கள்  செய்து வந்தால், உதட்டில் வரும் வெண்புள்ளி (வெண்குட்டம்) போகும்.

13.  பெருமருந்து (ஈஸ்வரமூலி) உலர்ந்த வேர் ஒரு கிராம் எடுத்து தேனில் உரைத்துக் கொடுத்துவர வெண்புள்ளிகள்  தீரும். (563)

14.  மருதோன்றி வேர்ப்பட்டையைப் பாலில் அரைத்துப் புள்ளிகள் இருக்குமிடத்தில் பற்றுப் போட்டு வந்தால், வெண்புள்ளிகள் தீரும்.

15.  வில்வக் காயைச் சில துளி வெந்நீர் விட்டுச் சந்தனக் கல்லில் உரைத்து (தேய்த்து) வழித்து எடுத்து வெண்புள்ளிகள் மீது இரவில் மட்டும் தொடர்ந்து 120 நட்கள் போட்டு வந்தால் வெண்புள்ளிகள் தீரும்.

16.  விழுதித் தைலம் பத்து துளி, பாலில் கலந்து, இரவில் மட்டும் நீண்ட நாள் சாப்பிட்டு வந்தால், வெண்மேகம் எனப்படும் வெண்புள்ளிகள்  தீரும்.

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================

தோல் - படை (Eczema)

01.      ஆடு தின்னாப் பாளைச் சாறு எடுத்து வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆற வைத்து  அந்தத் தைலத்தை கரும்படைக்குத் தடவி வந்தால் குணமாகும்.(448)

02.   எலுமிச்சம் பழச் சாறு இரண்டு பாலாடையும், துளசிச் சாறு இரண்டு பாலாடையும்  சேர்த்துக் கலந்து பூசி வர வேண்டும்.உணவில் புளி, காரம் குறைத்துக் கொள்ள வேண்டும். 15 நாளுக்குள்  படை நோய் சரியாகி விடும் (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் )

03.   எழுத்தாணிப் பூண்டின் இலைகளை இடித்துச் சாறெடுத்து சம அளவு எள் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி, வடிகட்டி தினமும் காலை மாலை சொறி, சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை நீங்கிடும்

04.   கருஞ் செம்பை  இலையுடன் குப்பை மேனி இலை சேர்த்து அரைத்துக் கலக்கித் தடவி நன்கு காய்ந்த பின் குளித்து வர வேண்டும். சில தடவை இவ்வாறு செய்தால் படை மறைந்து விடும்.(1032)

05.   கோவை இலைச் சாறுடன் , கருஞ் சீரகப்பொடி ஐந்து கிராம் சேர்த்து அரைத்து படை மீது தடவி ஒரு மணி நேரம் சென்ற பின் குளித்தால் படை குணமாகும். இவ்வாறு சில தடவைகள் செய்ய வேண்டும். (437)

06.   திருநீற்றுப் பச்சிலை இலைச் சாற்றை படை முதலிய சரும நோய்களுக்கு நோய்கண்ட இடத்தில் பூசிவர அவை எளிதில் மறையும்

07.   துளசி இலையை எலுமிச்சம் பழச் சாறுடன் அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் படை, சொறி நீங்கும்.

08.   துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து தேமல், படை மீது பூசி வந்தால், அவை விரைவில் நீங்கும்.

09.   நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வந்தால் தேமல், படை முதலியவை நீங்கும்.