மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி ”ம”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி ”ம”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மேக நோய் (Venereal Disease)

 

01.   மாசிக்காயைக் கசாயமாக்கி 30 மி.லி வீதம் அருந்தும் பெண்களுக்கு மேக நோய் கட்டுப்படும்.

 

02.   மாந்தளிரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் மேக நோய் குணமாகும்.  (584)

 

03.   வாதநாராயணன் இலையைக் காயவைத்து இடித்து பொடியாக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் மேகநோய் குறையும்.  (590)

 =====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================

 

 

மூலம் (Emerods / Piles)

 

01.  அகத்திக் கீரை கைப்பிடி அளவு ஒரு பாத்திரத்தில் போட்டு விளக்கெண்ணெய் விட்டு, வதக்கி, சிறிது மாசிக்காய்ப் பொடி சேர்த்து, வடிகட்டி, அந்த எண்ணெயை மேல் பூச்சாக மூலத்திற்குத் தடவுங்கள். மூலம் கட்டுப்படும்.

 

02.  அதிமதுரப் பொடி 1 அல்லது 2 கிராம் எடுத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(088)

 

03.  அந்தரத் தாமரை  இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து )ஆகாயத்தாமரைத் தைலம்( வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

 

04.  அந்தரத் தாமரை இலைச்சாற்றை 25 மி.லி எடுத்து தேனுடன் கலந்து காலை, மாலை தொடர்ந்து கொடுத்து வந்தால் மூலம், குணமாகும்..

 

05.  அந்தரத் தாமரை இலையைக் கொதிக்க வைத்து அந்த ஆவியை ஆசனவாயில் 10 நிமிடம் காட்டி வந்தால் மூலம் அகலும். (350)


06.  அறுகம்புல் வேர், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒருதேக்கரண்டி பொடியை எடுத்து பசுநெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(374)


07.  ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, அறுகம்புல்லின் வேரினை எடுத்து அதையும் நிழலில் உலர்த்தி இரண்டையும் பொடி செய்து, ஒன்றாகக் கலந்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, பசுநெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(374)

 

08.  ஆவாரம் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன், அதே அளவு அருகம் புல்லை இடித்து சூரணம் செய்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, தினமும் காலை மாலை அரைத் தேக்கரண்டி  எடுத்து பசு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் கட்டுப்படும்.


09.  எள், திப்பிலி, சுக்கு மூன்றும் சம அளவு எடுத்து மைய இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள்,  வேளைக்கு அரை தேக்கரண்டி வீதம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(375)


10.  கடுகு 5 கிராம், கருஞ்சீரகம், திப்பிலி, கடுக்காய் ஒன்று, இவைகளைப் பொடித்து காலை மாலை உணவுக்குப் பின் அரைத் தேக்கரண்டி வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் மூலம் நீங்கும்.

 

11.  கடுக்காயின் சதைப் பகுதிப் பொடி 300 கிராம், எட்டுப் பங்கு நீர் விட்டு, எட்டில் ஒன்றாக வற்றக் காய்ச்சி, வடிகட்டவும். வெல்லம் 300 கிராம் எடுத்து, நீரில் கரைத்து, கொதிக்க வைத்து பாகு தயார் செய்யவும். இந்தப் பாகுடன் கடுக்காய்ப் பொடியைக் கலக்கவும். அத்துடன் இஞ்சி, ஓமம், சிவதை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், வகைக்கு 30கிராம் எடுத்து அரைத்து, இந்தக் கசாயத்தில் போட்டு 450 மி.லி. பசு நெய் சேர்த்துக் கிண்டி இலேகியம் செய்யவும். இந்த இலேகியத்தை வேளை ஒன்றுக்கு நெல்லிக் காய் அளவு உட்கொள்ளலாம் மூலநோய், பசியின்மை சீரடையும்.

 

12.  கருணைக் கிழங்கினை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்துக் கொண்டால் மூலம் கட்டுப்படும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.(354)

 

13.  கருணைக் கிழங்கினைச் சிறு துண்டுகளாக நறுக்கித் துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.(370)

 

14.  கருணைக் கிழங்கை (சிறுகிழங்கு)  தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக அரிந்து உலர்த்தி மூன்று முறை தயிரில் ஊறவைத்து (ஒவ்வொரு முறையும் உலர்த்த வேண்டும்) மறுபடியும் உலர்த்தவேண்டும். இவ்வாறு உலர்த்திய கிழங்கு 200 கிராம், சுக்கு 40 கிராம், மிளகு 40 கிராம், இந்துப்பு 40 கிராம் தனிதனியாகப் பொடி செய்து கலந்து எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்து ,பனங்கற்கண்டைப் பொடித்துச் சேர்த்துப் பக்குவமகப் பிசைந்து நெல்லிக் காயளவு காலை மாலை ஐந்து மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நவ மூலம் தீரும்.

 

15.  கருவேல மர இலையை அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் கட்டி வந்தால் மூல நோய் குணமாகும்.(353) (387)


16.  காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைய அரைத்து ஆசன வாயில் தடவி வந்தால் மூலம் சில நாட்களில் குணமாகும்.(349)

 

17.  குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு கரண்டி, இரண்டையும் சேர்த்து அரைத்துப் பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட மூலம், இரத்தப் போக்கு நின்றுவிடலாம்.(364)

 

18.  கொள்ளினை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்தக் கொள்ளினை அப்படியே சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

 

19.  சிறு வெங்காயத்தை எடுத்து நசுக்கி ஒரு பாலாடை, சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி வெறும் வயிற்றில் காலையிலும் மாலை 5 மணி வாக்கிலும் இரு வேளைகளாக 25 நாள்கள் குடிக்க வேண்டும். மூலம் குணமாகும்.(ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

20.  சுக்கு ஒரு துண்டு எடுத்து  தோல் நீக்கி, கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட ஆசன நோய் தீரும்.


21.  சுக்குடன் கொத்துமல்லி விதை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் மூல நோய் தீரும்.

 

22.  சுண்டை வற்றல், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், மிளகு ஆகியவற்றை இளவறுப்பாய் வறுத்து, உப்பு சேர்த்துச் சூரணம் செய்து உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீரும்.

 

23.  சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளம்பழ ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வறுத்து இடித்த சூரணம் காலை மாலை இரண்டு சிட்டிகை மோரில் சாப்பிட்டு வர மூலம் தீரும்.

 

24.  திப்பிலி, சுக்கு, எள் மூன்றயும் சம அளவு எடுத்து மைய இடித்துத் தூள் செய்து அரை  தேக்கரண்டி எடுத்து ஒரு நாளைக்கு மூன்று முறை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.(375)

 

25.  துத்தி  விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அளவுக்கு வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் அருந்தி வரலாம்.

 

26.  துத்தி இலைகள் இரண்டு கைப்பிடி எடுத்து நான்கு தம்ளர் நீர் ஊற்றி ஒரு சட்டியில் இட்டுக் கொதிக்க விட வேண்டும். இரண்டு கொதி வந்தால் போதும். கொதி நீரை வடிகட்டி, பனங் கற்கண்டு சேர்த்து காலை மாலை 20 நாள்கள் குடிக்க வேண்டும். உணவில் காரம், புளி குறைக்க வேண்டும். இரண்டு மாதங்கள் உடல் உறவு கூடாது. இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் குணமாகும். (ஆதாரம்: “ நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

27.  துத்தி இலையைக் காரமின்றிப் பொரியலாகச் செய்து முதல் சோற்றுடன் பிசைந்து 40 முதல் 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் தீரும். காரம், புளி, புலால் நீக்க வேண்டும்.

 

28.  துத்தி இலையைக் கொண்டுவந்து மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம் கட்டுவது போன்று துணியை வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் இரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

 

29.  துத்திக் கீரையை வதக்கி, நாயுருவி விதைச் சூரணம் இருபது கிராம் கலந்து உணவில் சேர்த்து உண்ண, மூலம் அனைத்தும் தீரும்.

 

30.  தும்பை வேர், வேளை இலை, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ஆசன வாயில் வைத்துக் கட்டி வந்தால் மூலம், பௌத்திரம்  குணமாகும்.(372)

 

31.  தொட்டாற் சுருங்கி இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம் குணமாகும்.

 

32.  பப்பாளிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. மலச்சிக்கல் இல்லாமையால் மூலம் விரைவில் குணமகும்.(1168)

 

33.  பப்பாளிப்பழம், மாம்பழம் இரண்டையும் சுளைகளை எடுத்துத் தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.(363)


34.  பப்பாளிப் பழம் மூல நோய்க்காரர்களுக்கு நல்லது. தயக்கமின்றி சாப்பிடலாம். (நோய் குணமாக இது உதவியாக இருக்கும்.  (1212)


35.  பாகல் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் வெளி மூலம் குறையும்.  (1374)


36.  பிரண்டை உப்பு 100 மி.கி வீதம் நெய் அல்லது வெண்ணெயில் கலந்து 50 - 100 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் ஒன்பது வகை மூலமும் தீரும்.

 

37.  பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) இரண்டு வேளை கொடுதது வர மூலம், ஆசனவாய் எரிச்சல் மற்றும் கடுப்பு ஆகியவை  தீரும்.

 

38.  பிரண்டையை நெய் விட்டு வதக்கித் துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும். மூலநோய் வராது. இரத்தக் கழிச்சல் தீரும்.(360)


39.  புங்கம் பட்டையை எடுத்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கசாயமாக்கி, தினசரி 30 மி.லி. குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.  (1269)


40.  பொடித்த கற்கண்டு 150 கிராம் எடுத்து, நீர் விட்டு, கிளறி, 15 கிராம் கடுக்காய்ப் பொடி கலந்து, காலை மாலை  அரைத் தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொண்டால், குடல் புண், சுவாச காசம், மூலம், வாதம் கட்டுப்படும்.

 

41.  பொன்னாங் கண்ணியை வேருடன் பிடுங்கி, நீரில் கழுவிச் சுத்தம் செய்திட வேண்டும். அதை ஒரு மண் சட்டியில் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். சாயம் ஒரு தம்ளராகச் சுண்டும் வரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். இவ்வாறு 48 நாள்கள் காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் 5 மணி வாக்கிலும் சாப்பிட வேண்டும். குழம்பில் காரமும் புளியும் பாதியளவு தான் இருக்க வேண்டும். சிறு வெங்காயம் பச்சையாக அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.  ஆசனத்தைச் சுற்றி மூல நோயின் முளைகள் இருந்தால் ஆமணக்கு இலைகளைப் பறித்து வந்து நறுக்கி, சிறிது எள் எண்னெய் விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டில் ஆசனத்தில் வைத்துக் கோவணமாகக் கட்ட வேண்டும். நாள்தோறும் இரவில் ஆமணக்கு இலை சிகிச்சையைத் தொடர வேண்டும். இவ்வாறு செய்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும். (ஆதாரம் : ‘நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

42.  பொன்னாங்கண்ணிக் கீரை அரை கிலோ எடுத்து, 50 கிராம் வெங்காயம், 3 பூண்டுப்பல் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலநோய் தாக்கம் குறையும்.

 

43.  மஞ்சள் பொடியுடன் சிறிதளவு வெண்ணெய் கலந்து மூலத்திற்குத் தடவி வரலாம்.

 

44.  மணித் தக்காளிக் கீரையைச் சிறிதளவு எடுத்து  பாசிப் பருப்பு போட்டு, கூட்டு வைத்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், மூல நோய் தொல்லை குறையும்

 

45.  மாதுளம் பழத் தோலை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு ஆசன வாயை அடிக்கடிக் கழுவி வந்தால் மூலநோய் குணமாகும்.(376)

 

46.  மாதுளம் பூக்கள் ஐந்தாறு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சிக் குடி நீர் செய்து, கற்கண்டு சேர்த்து வேளைக்கு 60 மி.லி வீதம் தினமும் இருவேளைகள் சாப்பிட்டு வந்தால் மூலம், ஆசனக் கடுப்பு ஆகியவை தீரும்.

 

47.  முடக்கத்தான் வேர் 50 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, வேளைக்கு 100 மி.லி வீதம் காலை மாலை 21 நாள் சாப்பிட்டு வந்தால் ஆசவாய்க் கடுப்பு, மூலம் தீரும். காரம் நீக்குக.

 

48.  முள்ளங்கிச் சாறு ஒரு தம்ளர் எடுத்து ஒரு தம்ளர் மோருடன் கலந்து 25 நாள்கள் வரை காலை மாலை இரு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.  மூலநோய் கட்டுப்படும். (ஆதாரம் நா..நாநூல்)


49.  முடக்கத்தான் வேர் ஒரு பிடி எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி, கசாயம் செய்து வேளைக்கு 100 மி.லி வீதம் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் தீரும்.  (1545)


50.  வாழைப்பூச் சாறு, கடுக்காய்ப் பொடி இரண்டையும் சேர்த்து 30 மி.லி அளவுக்கு தினசரி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.(373) (1076)

 

51.  வெங்காயம் தும்பை வேர், வேளை இலை, சேர்த்து அரைத்து வைத்துக் கட்டினால் மூலம், பௌத்திரம் குணமாகும்.   (372)

 

52.  வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு, மூலநோய் தீரும்.


53.  வெங்காயத்தை மிக மெல்லியதாகச் சீவி பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.  (1225)


54.  வேம்பு கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். மூன்று கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலையாக 40 நாட்கள் சாப்பிட்டு வர மூல நோய் நீங்கும்.


55.  வேளை (நல்ல வேளை) இலை, தும்பை வேர், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கட்டி வந்தால் மூலம், பௌத்திரம் குணமாகும்.  (372)


56.  வேப்பம் பருப்பை வெல்லம் சேர்த்து அரைத்து 3 கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் தீரும்.  (1668)  மூலநோய் குணமாகும்.  (1655)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================