மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “க” கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 ஜூன், 2021

கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL.Cholesterol)

 

                   கொழுப்புநல்ல கொழுப்பு


01.   இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை (L.D.L) குறைத்து நல்ல கொழுப்பை (H.D.L) மிகுதியாக்கும் குணம் கேழ்வரகுக்கு உள்ளது.


                           கொழுப்பு படிதல்

 

01.   கொத்துமல்லி, உடலில் கொழுப்புச் சத்தைக் குறத்து, இரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதைத் தடுக்கிறது. மாரடைப்பிலிருந்து காக்கிறது.

 

==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

 

==========================================================


 

கைக்குழந்தை - மருத்துவம் (Infants Medication)

 

01.   அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்துப் கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு உண்டாகும் கட்டிகள்மீது  பூசிவந்தால் கட்டிகள் உடைந்து குணமாகும்.

 

02.   உத்தாமணி இலைச் சாற்றில் மிளகை ஊற வைத்து, பின் உலர வைத்து, பொடி செய்து ஒரு துவரம் பருப்பு எடை தேனில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுரம் மற்றும் சகல நோய்களும் தீரும்.(1699) மாந்த இழுப்பும் குணமாகும்.(1746)

 

03.   உத்தாமணி, பொடுதலை, நுணா, நொச்சி ஆகியவற்றை சம அளவு எடுத்து சற்று வதக்கிப் பிழிந்து எடுத்த சாறினை 10 மி.லி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளின்  சளி தீரும்.(1744)

 

04.   உத்தாமணி வேரை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து, இந்தப் பொடியில் நான்கு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களது வாயுத் தொல்லை தீரும்.(1713) குடல் பூச்சிகள் ஒழியும் (1728)

 

05.   உப்பிலாங் கொடி இலையைப் பசு நெய்யில் போட்டு ஐந்தாறு நாட்கள் வெயிலில் வைத்திருந்து, வடிகட்டி ஓரிரு துளிகள் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் மற்றும் காய்ச்சல் சரியாகும்.(208)

 

06.   ஓமவல்லி இலைச் சாற்றை ஒரு சங்களவு எடுத்து கோரோசனை சேர்த்து குழந்தைகளுக்குப்புகட்டி விட்டால் மாந்தம், செரியாமை, இருமல் ஆகியவை தீரும்.

 

07.   கரிசலாங் கண்ணி இலைச்சாறு 2 துளி எடுத்து 5 துளி தேனிற் கலந்து கைக் குழந்தைகளுக்குக் கொடுக்க, நீர்கோவை, சளி ஆகியவை நீங்கும்,

 

08.   கரிசலாங் கண்ணிச் சாறு பத்துச் சொட்டு + தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்

 

09.   கல்யாண முருங்கை இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

 

10.   கறிவேப்பிலை, மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து அருநெல்லிக்காயளவு குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்தால் மந்தம் குறையும். பசியைத் தூண்டும்.(274)

 

11.   காக்கிரட்டை விதைச் சூரணம் [ நெய்யில் வறுத்து இடித்தது ] 5 முதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்கக் குழந்தைகளுக்கானஇழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.

 

12.   காக்கிரட்டை இலைச் சாறினை தாய்ப் பாலில் கலந்து புகட்டினால் குழந்தைகளுக்கு சளித் தொந்தரவு நீங்கும்.(171)

 

13.   குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், குழந்தை ஆரோக்யத்துடன் பிறக்கும்.

 

14.   கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் கசாயம், , குழந்தைகளுக்கு மாந்தம், இழுப்பு போன்ற நோய்களுக்கும் நிவாரணியாகக் கொடுக்கப்படுகிறது.

 

15.   சதகுப்பை இலைச் சாறு 20 மி.லி எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று வலி குறையும்.

 

16.   சதகுப்பை விதைகளை 30 கிராம் எடுத்து, பொடித்து, அரை லிட்டர் நீரில் ஊறவைத்து  அருந்தினால், மாந்தம் தணியும்.

 

17.   சதகுப்பை விதையை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் செரிமான ஆற்றல் பெருகும்.(693)

 

18.   திப்பிலிப் பொடி சிறிதளவு எடுத்து  தேனில் குழைத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.

 

19.   திப்பிலி, வெள்ளைப் பூண்டு, வெற்றிலைக் காம்பு, வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து வெண்ணையில் அரைத்து  உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை நீங்கும்.  (113)

 

20.   துளசி இலைகளை ஒரு கைப்பிடி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை சிறு குழந்தைகளுக்குத் தலைக்கு ஊற்றினால் சளிபிடிக்காது

 

21.   துளசி இலையைப் பிட்டு போல் அவித்துச் சாறெடுத்து சிறிது கோரோசனை சேர்த்து குழந்தைகட்குப்  புகட்டினால் இருமல் தீரும்

 

22.   துளசிச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் ஆகியவை   தீரும்.

 

23.   நல்வேளைச் செடியின் பூவினைச் சேகரித்து, கசக்கி சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்புச் சளி ஆகியவை குணமாகும்.

 

24.   நாய்த்துளசி இலைச்சாறில் 30 துளிகள் சிறிது பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மாந்தக் கழிச்சல், இருமல், விக்கல், சளி ஆகியவை தீரும்.  (123)

 

25.   நிலவேம்பு இலைச் சாற்றை குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல்களுக்கு, 15 மி.லி அளவு கொடுக்கலாம்.

 

26.   நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு200 மி.லி- ஆகக் காய்ச்சி 30 மி.லி. வீதம்கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் சகலக் காய்ச்சலும் தீரும்.

 

27.   நுணா இலைகள் ( பசுமையானது ) ஐந்து எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி தினமும் காலை மாலை 20 மி.லி வீதம்  உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், கழிச்சல்ஆகியவை தீரும்.

 

28.   நுணா இலைகள் ஐந்து ஒரு கொத்து வேப்பங் கொழுந்து ஆகியவற்றை வதக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம், ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம் சேர்த்து அரை லிட்டர் நீரில் இட்டு ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை 2 வேளைகள்  2 தேக்கரண்டி வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் குணமாகும்.

 

29.   நுணா இலைகள் ஐந்து, ஒரு கொத்து வேப்பங் கொழுந்து, 2 கிராம் சுக்கு, ஒரு தேக்கரண்டி ஓமம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நுணா இலை, வேப்பங் கொழுந்து ஆகியவற்றை வதக்கி, அதனுடன் சுக்கு, மிளகு, ஓமம் ஆகியவற்றை நசுக்கிச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக்  காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டி 2 தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு அஜீரணத்தால் ஏற்படும் காய்ச்சல் சரியாகும்.

 

30.   பழம்பாசி இலைகள் 20  கிராம் எடுத்து பொடியாய் அரிந்து  அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து  வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும்.  .  இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக்  காலை  மாலை கொடுத்து வர  இரத்தக்  கழிச்சல், சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.  ஆசனம் வெளித் தள்ளல் தீரும்.

 

31.   பூண்டுப்பல், வெற்றிலைக் காம்பு, சுட்ட வசம்பு, திப்பிலி ஆகியவற்றை சம அளவு எடுத்து வெண்ணையில் அரைத்து உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை நீங்கும்.  (113)

 

32.   பூசணிக் காயைத் துருவி பிட்டு அவியலாக அவித்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்  எலும்பும் தோலுமாக இருக்கும் குழந்தைகளின் உடல் நல்ல வளர்ச்சி பெறும். சதை பிடிக்கும். எடை கூடும்.  (1510)

 

33.   பேய்மிரட்டி இலைச்சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க, பல் முளைக்கும் போது ஏற்படும் வயிற்றோட்டம் தீரும்.

 

34.   பேய்மிரட்டி:- குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது ஏற்படும் காஸம், மாந்தம் ஆகியவை குணமாக, மிளகு ஓமம் இரண்டையும் மண் சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டிருக்கும் போது அத்துடன்  நீர் விட்டு, ஒரு கொதி வருகையில் பேய் மிரட்டி இலைகளை அதில் போட்டு, சுண்டக் காய்ச்சி, இரு வேளைகள் சிறிதளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.  (222)

 

35.   பேரரத்தை, நிலவேம்பு சம அளவு எடுத்து அரைத்து நீர் சேர்த்து, சுண்டக் காய்ச்சி காலை, மாலை குடித்தால் குளிர் காய்ச்சல் குணமாகும்.  (207)

 

36.   மஞ்சள் கிழங்கைக் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாகும்.  (033) (1920)

 

37.   முருங்கை இலைச் சாறினை குழந்தைகளுக்கு மார்புச் சளி அதிகமாக  இருக்கும் போது, ஒரு தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தை வாந்தி எடுக்கும். வாந்தியுடன் சளியும் சேர்ந்து வெளியே வந்து விடும்.

 

38.   முருங்கை இலையைக் கசக்கிச் சாறு எடுத்து சிறிது சூடு காட்டி  அரைச் சங்கு குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் மலக்கட்டு, வயிற்று உப்பிசம் ஆகியவை நீங்கும்.  (358)

 

39.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, 4 மிளகும் 100 மி.லி விளக்கெண்ணெயில் வாசனை வரக் காய்ச்சி, ஆறவிட்டு, வடிகட்டி வைத்துக் கொண்டு 6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி வீதமும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி வீதமும் வாரம் 1 அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி, செரியாமை ஆகியவை தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும் 

 

40.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, மிளகு 4 , உத்தாமணிச்சாறு 50 மி.லி ஆகியவற்றை 100 மி. லி விளக்கெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் கொடுத்துவரக் குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி காய்ச்சல் வருதல் குணமாகும்.

 

41.   வசம்பு ஒரு பங்கும், வெந்நீர் பத்து பங்கும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி 15 முதல் 30 மி.லி அளவுக்கு அருந்தி வந்தால் செரியாமையைப் போக்கி, வயிற்றில் சேர்ந்த வாயுவைப் போக்கும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், காய்ச்சலுக்கும் கூட இதனைக் கொடுக்கலாம்.

 

42.   வசம்பு சுட்டகரியும் உத்தாமணிச் சாற்றில் சிறிதளவு உப்பும் சேர்த்து மண் சட்டியில் இட்டுக் காய்ச்ச, உப்பு சுண்டி வெளுத்துப் பொடியாகும். இப்பொடியை சிறிது எடுத்து சிறு குழந்தைகட்கு வரும் மாந்தம், அள்ளு மந்தம், செரியாக் கழிச்சல் முதலிய நோய்களுக்கு, 25 மி.லி வெந்நீரில். கலந்து புகட்ட, நோய் நீங்கும்.

 

43.   வசம்பு, உப்பு சேர்த்துச் சுட்டுக் கரியாக்கி, அதை நீரில் குழைத்து முருங்கை இலைச் சாறுடன், தொப்புளைச் சுற்றித் தடவினால் குழந்தைகளின் சாதாரண வயிற்றுவலி தீரும்.

 

44.   வசம்பைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் எடுத்து தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால்  அவர்களது வயிற்று வலி தீரும். (562) (673)

 

45.   வசம்புடன் அதிமதுரக் கட்டையைச் சேர்த்துக் காய்ச்சிக் குழந்தைகளுக்கு இரவில் வரும் சளிக்கு, கொடுக்கலாம். ஓரிரு நாட்களில் குணமாகும்.

 

46.   வசம்புத் தூளை சிறிதளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தந்தால், காய்ச்சல் குணமாகும்.

 

47.   வசம்புத் தூளைத் தேனில் குழைத்து விடியற்காலை தோறும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், நாக்குப் பிறழ்ச்சி நீங்கும்.

 

48.   வசம்புப் பொடியை  தேனில் குழைத்து உள்நாக்கில் தினந்தோறும் தடவவும். இதனால் பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்குத் தொண்டையில் படியும் அக்கரம் நீங்கும்.

 

49.   வசம்புப் பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து கொடுத்தால், திக்கிப் பேசுதல் சரியாகும்.

 

50.   வசம்பை நல்ல விளக்கில் சுட்டு, தாய்ப்பாலில் மூன்று முறை உரைத்து தொப்புளைச் சுற்றித் தடவுங்கள். குழந்தையின் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு குணமாகும்.

 

51.   வசம்பைச்  சூடு படுத்திப் பொடித்து பாலில் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்குப் பசியின்மை வராமல் தடுக்கலாம்.

 

52.   வசம்பைச் சுட்டுத் தூளாக்கி சுக்குப் பொடியுடன் கலந்து குழந்தைகளின் களின்  வயிற்றின் மேல் பூசினால் உப்புசம் மாறும்.

 

53.   வசம்பைத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் மூன்று முறை உரைத்து, குழந்தைகளின் நாக்கில் தடவினால், பேச்சுத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் ஆகியன தீரும்.

 

54.   மூக்கிரட்டை வேர், மிளகு, உத்தாமணிச் சாறு ஆகியவற்றை எடுத்து விளக்கெண்ணெயில் இட்டுக் காய்ச்சி குழந்தைகளுக்கு 10 மி.லி கொடுத்தால் மாந்த இழுப்பு குணமாகும்.   (1598)

 

55.   வெற்றிலைச் சாறில் கோரோசனை இழைத்து குழந்தைகளுக்குக் அரைச் சங்கு கொடுத்தால் மூச்சுத் திணறல் குணமாகும்.(151) (1175)

 

56.   வெற்றிலையை சூடு படுத்தி குழந்தையின் வயிற்றின் மீது போட்டு வைத்தால் வயிற்றுப் பொருமலால் ஏற்படும் வலி குணமாகும். (654)

 

57.   வெற்றிலைக் காம்பு, வெள்ளைப் பூண்டு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.  (113)

 

58.      வேளை (நல்லவேளை)ப் பூச் சாறு 10 துளி எடுத்து தாய்ப் பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் தீரும்.  (193)  (1691)

 

  

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )21]

{04-06-2021}

 

==========================================================