மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “ப”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

பௌத்திரம் (Fistula / Archosyrinx )

01.  எட்டி இலையை மை போல் அரைத்து சிறு சிறு வில்லைகளாகத் தட்டி பௌத்திர இடத்தில் கட்டி வந்தால் பூச்சிகள் தானாக வெளிப்பட்டு மடிந்து விடும்.(1007)

02.  தும்பை வேர், வேளை இலை, வெங்காயம் சேர்த்து அரைத்துக் கட்டி வந்தால், பௌத்திரம் குணமாகும்.(372)

03.  பொடுதலையுடன் உளுத்தம் பருப்பும் சேர்த்து நெய்யில் வதக்கி, துவையல் செய்து பகல் உணவாகச் சாப்பிட்டு வந்தால் உள்மூலம், பௌத்திரம் ஆகியவை தீரும். (1505)

04.  தும்பை வேர், வேளை இலை, வெங்காயம் சேர்த்து அரைத்து வைத்துக் கட்டினால் மூலம், பௌத்திரம் குணமாகும்.   (372)

05.  வேளை (நல்ல வேளை) இலை, தும்பை வேர், வெங்காயம் சேர்த்து அரைத்துக் கட்டி வந்தால் மூலம், பௌத்திரம் குணமாகும்.  (372)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (டி )16]

{01-08-2021}

பொன்னுக்கு வீங்கி (Mumps)

01.  கன்னத்திலும் கழுத்திலும் வசம்பு, பலகை மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் பொன்னுக்கு வீங்கி,  குணமாகும்..(1006)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,கடகம் (டி )16]

{01-08-2021}

==========================================================

பொடுகை நீக்கிட ( To wipe out dandruff)

01. கடுகு எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் பொடுகு நீங்கும்.

02. செம்பருத்தி இலைகளை கைப்பிடி அளவு எடுத்து, பத்து மருதாணி இலையும் தண்ணீரும் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து, தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு  குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்க !

03. செம்பருத்தியின் காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்

04. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயப் பொடி, கற்பூரம் சேர்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும் பேன், பொடுகு மறையும்.

05. பாலில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை நீங்கும்,

06. பொடுதலை என்னும் படர் செடியை வேருடன் பிடுங்கி வந்து கழுவி சுத்தம் செய்து அரைத்துச் சாறெடுத்து, சமனளவு நல்லெண்ணை சேர்த்துக் காய்ச்சி வடித்து  வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து முழுகி வந்தால், நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.(935)