மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கருப்பை - உதிரச்சிக்கல்.

01.  அரிசி மாவை ஆவியில் அவித்து, தேங்காய், கருப்பட்டி சேர்த்து உண்டு வர,பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கு சமன்படும் (553)

02.  கிராம்புப் பொடியைப் பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உதிரச் சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.  (635)

03.  சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வர உதிரச் சிக்கல் தீரும். (219)

04.  சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு பொடித்து, பனை வெல்லம் கலந்து சோம்பு நீருடன் கொடுத்து வர, உதிரச் சிக்கல் நீங்கி கருப்பை பலம் பெறும். (607)

05.  செம்பருத்திப் பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்

06.  நன்னாரி வேரை இடித்துச் சாறு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, இரத்தக் கோளாறுகள் நீங்கும். (558)

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================

கருத்தடை (Contraceptive)

01.   அன்னாசிப் பழம், கருஞ்சீரகம், வெல்லம் சேர்ந்த கலவை கருத் தடைக்கு உதவும். (598)

02.   எலுமிச்சம் பழ விதைகள் 15, வெற்றிலைக் காம்பு 15  இரண்டையும் எடுத்து நன்கு அரைத்து மாத விலக்கு ஏற்பட்ட நாளன்று  ஒரு சுண்டைக் காயளவு வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு காலை மாலையாக தொடர்ந்து 9 நாட்கள் சாப்பிட வேண்டும். 12-ஆம் நாள் முதல் 21-ஆம் நாள் வரை உடலுறவு கூடாது. இது மிகச் சிறந்த கருத்தடை மருந்தாகும். (ஆதாரம்: ”நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

03.   எள், பப்பாளிப் பழத்தை உடல் உறவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் கருத் தரிப்பைத் தவிர்க்கலாம். (586) (1874)

04.   கருஞ்சீரகம், அன்னாசிப் பழம் வெல்லம் கலந்த கலவை  கருத் தடைக்கு உதவும்.(598)

05.   பப்பாளிக் காயை (பழுக்காத) தோல் சீவித் துண்டுகளாக நறுக்கி, உரலில் போட்டு இடிக்க வேண்டும். அதில் ஒரு சுண்டைக் காய் அளவு பெருங்காயம் சேர்த்து இடித்து சாறு பிழிய வேண்டும். ஒரு தம்ளர் ( 3 அவுன்சு) சாறு எடுத்து மாத விலக்கு ஏற்பட்ட நாள் முதல் 3 நாட்களுக்கு காலை மாலை என இரு வேளைகள் குடிக்க வேண்டும். மருந்து சாப்பிட்ட நாள் முதல் 21 நாட்கள் உடலுறவு கூடாது. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் கரு உண்டாகாமல் நிரந்தரமாகத் தடுக்கலாம் (ஆதாரம்: “நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)

============================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

கருச்சிதைவு (Abortion)

1)    அல்லி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, பால் அல்லது தேனில் அரைத் தேக்கரண்டி கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================

கரப்பான் (Scurf)

01.   அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்

02. கரப்பானுக்கு ஆங்கிலத்தில் SCURF என்றும், சொறி கரப்பானுக்கு SCURVEY என்றும் பெயர்.

03.   கொத்துமல்லி விதை எண்ணெய் கரப்பான், காளான்படை ஆகிய தோல் நோகளுக்கு சரியான மருந்தாகும்.

04.   சிற்றாமணக்கு வேர் புங்க வேர் இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.(825)

05   துத்தி இலையை நன்றாக அரைத்துக்  அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாகக் காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குத் தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

06.   புங்க மர வேர், சிற்றாமணக்கு வேர் இரண்டையும் சம அளவு எடுத்து நீரில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் கரப்பான் தீரும்.  (825)

07.   முடக்கற்றான் மூலிகையானது ,கீல் வாதம், சினைப்பு, கிரந்தி, கரப்பான் பாதத்தைப் பற்றிய வாதம் ஆகியவற்றைப் போக்கும்.

08. வேப்பிலையுடன் சிறிது தேனும் மஞ்சளும் சேர்த்து அரைத்துத் துணியில் தடவி மேலுக்குப் போட கரப்பான், சொறி சிரங்கு, அம்மைப்புண்  இவைகள் நீங்கும். எரிச்சல் இருந்தால் அரிசி மாவு கூட்டிக் கொள்ளலாம்.