மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வயிறு - பெருவயிறு (Abnormal Belly)

 

01.   கரிசலாங்கண்ணிக் கீரையைச் சமைத்து உணவுடன் சேர்த்துக் வந்தால் பெருவயிறு ( மகோதரம் ) சரியாகும். (730)


02.   காட்டாமணக்கு வேர்ப் பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக் காயளவு பாலில் கலந்து கொடுத்து வந்தால்  பாண்டு,   சோகை,   காமாலை,   வீக்கம்வயிற்றுக் கட்டிபெரு வயிறு குட்டம் ஆகியவை தீரும்.

 

03.   கோரைக் கிழங்கைத் தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுத்து வந்தால் வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு சரியாகிவிடும்.(665)

 

04.   பூவரசங் காயின் எண்ணெயினால் பெருவயிறு, குன்மநோய் முதலியன தீரும்

 

05.   மணித்தக்காளி இலைச் சாற்றில்  50 மி,லி தினம் 3 வேளை கொடுக்க, நீரைப் பெருக்கி, நீர்ப்பாண்டு, பெருவயிறு, வாய்ப்புண், உட்சூடு இவற்றை அகற்றும்.

 

06.   மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.

 

07.   வாழைக் கிழங்கில் இரவில் சிறிது துவாரம் செய்து காலையில் அதில் ஊறியுள்ள நீரை எடுத்து 80 – 150 மி.லி  வீதம் குடித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சல் நீக்கும்; பெருவயிறு நோய் தீரும்; கல்லடைப்பு விலகும்.


08.   வேளை (நல்ல வேளை) இலையை கீரை போல் சமைத்து உண்டு வந்தால் இதயம், சிறுநீரகம், மண்ணீரல் நன்கு செயல்பட வைக்கும்.  (1708) நீர்க்கோவை, பெருவயிறு நோய்களைக் குணப்படுத்தும்.  (1726)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )21]

{06-08-2021}

==========================================================

 

 

வயிறு - பூச்சிகள் (Intestinal Germs)

 

01.   அன்னாசிப் பழம் தினசரி இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(706)

 

02.   அன்னாசிப் பழம் தொடர்ந்து சில நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழிந்துவிடும்.(706)

 

03.   இலவங்கப் பட்டையை வார இருமுறை உணவுடன் பயன் படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(796)

 

04.   இலவங்கப் பட்டையை வாரத்தில் இரண்டு நாள் உணவில் பயன்படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். தாது விருத்தியாகும்.(796)

 

05.   ஓமம் சிறிதளவு எடுத்து  வெல்லம் சேர்த்து தின்றால் வயிற்றுப் பூச்சி அழியும்.

 

06.   கல்யாண முருங்கை இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

 

07.   குப்பைமேனி இலைகள் ஒரு கைப்பிடி, பூண்டுப்பல் 4 ஆகியவை எடுத்து அரைத்து சாறு எடுத்து 15 மி.லி குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். (688)

 

08.   சுண்டைக் காய் சிறிதளவு, கறிவேப்பிலை, மிளகு போட்டு,கசாயம் வைத்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.

 

09.   துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீரில் அரைத் தம்ளர் எடுத்து அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(724)

 

10.   தேன் ஐந்து கிராம் எடுத்து அதில் மூன்று துளி எருக்கு இலையின் சாறினை விட்டுக் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கும். கீரிப்பூச்சி, கொக்கிப் புழு ஆகியவை வெளியேறும்.

 

11.   பப்பாளிப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்தால் வயிற்றுப்  பூச்சிகள் நீங்கும்.  (1412)

 

12.   பாகல் இலையை சாறு பிழிந்து 30 மி.லி  உட்கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(725) (732)

 

13.   பாகற் கொடி இலைகளை எடுத்து சாறு பிழிந்து 20 மி.லி உட்கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(725) (732) (1372)

 

14.   பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(660)

 

15.   பூண்டு, குப்பை மேனி அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப்பூச்சி ஒழிந்து குணம் பெறலம்.688)

 

16.   மாதுளம் செடியின் வேரினைச் சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி, அந்த நீரைப் பருகி  வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(691)

 

17.   மாம்பருப்பைப் பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை கொடுத்தால், குடல் பூச்சி அகலும்.  (655)

 

18.   வசம்பைச் சுட்டுக் கரியாக்கிப் பொடி செய்து தேனில் குழைத்து குழந்தகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். (345) (647) (705)

 

19.   வாய்விளங்காப் பொடியை வேளைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து மூன்று வேளை கொடுத்து ,மறு நாள் ஆலிவ்  எண்ணெய் குடிக்கக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும் (672)

 

20.   வெள்ளைப் பூண்டுப் பற்கள் ஐந்து எடுத்து  ஒரு கைப்பிடி குப்பை மேனியுடன் சேர்த்து  அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சி ஒழியும்.(688)

 

21.   வேப்பம் பூவை உப்புப் போட்ட மோரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும்.(699)

 

22.   வேப்பிலையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகளின் தொந்தரவு நீங்கும்.(681)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )21]

{06-08-2021}

==========================================================