01. கரிசலாங்கண்ணிக் கீரையைச் சமைத்து உணவுடன் சேர்த்துக் வந்தால் பெருவயிறு ( மகோதரம் ) சரியாகும். (730)
02. காட்டாமணக்கு வேர்ப் பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக் காயளவு பாலில் கலந்து கொடுத்து வந்தால் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெரு வயிறு குட்டம் ஆகியவை தீரும்.
03. கோரைக் கிழங்கைத் தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுத்து வந்தால் வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகளுக்கு சரியாகிவிடும்.(665)
04. பூவரசங் காயின் எண்ணெயினால் பெருவயிறு, குன்மநோய் முதலியன தீரும்
05. மணித்தக்காளி இலைச் சாற்றில்
50 மி,லி தினம் 3 வேளை கொடுக்க, நீரைப் பெருக்கி, நீர்ப்பாண்டு, பெருவயிறு, வாய்ப்புண், உட்சூடு இவற்றை அகற்றும்.
06. மூக்கிரட்டை வேர் ஒரு பிடி, அருகம் புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீரேற்றம், சோகை, வீக்கம், நீர்க்கட்டு, மகோதரம் தீரும்.
07. வாழைக் கிழங்கில் இரவில் சிறிது துவாரம் செய்து காலையில் அதில் ஊறியுள்ள நீரை எடுத்து 80 – 150 மி.லி வீதம் குடித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சல் நீக்கும்; பெருவயிறு நோய் தீரும்; கல்லடைப்பு விலகும்.
08. வேளை (நல்ல வேளை) இலையை கீரை போல் சமைத்து உண்டு வந்தால் இதயம், சிறுநீரகம், மண்ணீரல்
நன்கு செயல்பட வைக்கும்.
(1708) நீர்க்கோவை, பெருவயிறு நோய்களைக் குணப்படுத்தும். (1726)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================