மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

பிணி “அ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணி “அ”கர வரிசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2021

எலும்பு முறிவு வீக்கம் (Bone Fracture Swelling)

01.  பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றுப் போட்டால், சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும்.

  =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

எலும்புருக்கி (Tuberculosis)

01.   ஆடாதொடை இலைகள் 10 எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு,கால் லிட்டராகக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை  40 நாட்கள் பருகி வந்தால், எலும்புருக்கி நோய், காசநோய், இரத்தகாசம், சளி ஆகியவை தீரும்.

02.   ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.

03.   ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து  இடித்து சலித்து  ஒன்றாகக் கலந்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், சுவாசகாசம், இருமல், சளிச்சுரம், சளி, நரம்பு இழுப்பு, குடைச்சல் ஆகியவை குணப்படும்.

04.   கஞ்சாங் கோரை இலை பத்து  கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து அரைத்து வெந்நீரில் கொடுக்க, சளி வெளியாகி , ஆரம்ப எலும்புருக்கி நோய் குணமாகும்.(206)

05.   கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி. லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி ( T.B ),ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்

06.   கோணிக் கிழங்கைக் காய வைத்து இடித்துத் தூளாக்கி, பசும் பாலுடன் சாப்பிட்டு வர  உடல் உருக்கி நோய் குணமாகும். குஷ்ட ரோகம் மட்டுப் படும். (512)

07.   செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டை உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலையில் எழுந்ததும் ஒரு உருண்டையை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். (1079)

08.   தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட்டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

09.   தூதுவேளை இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர என்புருக்கி, காசம், மார்புச்சளி நீங்கும்.

10.   தூதுவேளை இலைச் சூரணம், முசு முசுக்கை இலைச் சூரணம் ஆகியவற்றை தலா ஒரு கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் என்புருக்கி நோய் நீங்கும்.  (365)

11.   நிலப்பனஞ்சாறு, தண்ணீர்விட்டன் கிழங்குச்சாறு, நெய் ஓர் அளவாகக் கூட்டி, எரித்து வடித்துக் காலை 10 கிராம் கொடுக்க எலும்புருக்கி நோய், கணச்சூடு முதலிய நோய்கள் தீரும். தொடர்ந்து கொடுத்து வர வேண்டும்.

12.   முசுமுசுக்கை இலைச் சூரணம், தூது வேளைச் சூரணம் கலந்து இரண்டு கிராம் சாப்பிட்டு வர எலும்புருக்கி நோய் நீங்கும்.(365)

13.   முசுமுக்கை இலைப் பொடி,  தூதுவேளை இலைப் பொடி, கருவேலம் பிசின் ஆகியவற்றை வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் என்புருக்கி நோய் தீரும்.  (1621)

 =========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )16]

{30-05-2021}

==========================================================

எச்சில் தழும்பு (Lintigo)

01.   எட்டிப் பருப்பினை எடுத்து மைய அரைத்து எச்சில் தழும்பின் மீது தடவி வந்தால் அவை குணமாகும்.(1675)

02.   சிவனார் வேம்பு இலைகளை அரைத்து எச்சில் தழும்புகள் மீது தடவி வந்தால், அவை குணமாகும்.(1676)

03.   வெள்ளைப் பூண்டுச் சாறு, வெற்றிலைச் சாறு கலந்து தடவி வர, எச்சில் புண் குணமாகும்.(211) (1674)

04.   வெற்றிலைச் சாறும் வெள்ளைப் பூண்டுச் சாறும் கலந்து தடவி வந்தால் எச்சிற் புண் குணமாகும்.  (211)