மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

புண் - தீப்புண் (Burns)

01.   எள் எண்ணெய் கால்படி எடுத்து  ஒரு எலுமிச்சங்காய் அளவு சுண்ணாம்பு சேர்த்துக் கலக்கினால் கலவை சூடாகும். இந்தக் கலவை ஆறியவுடன், அதைக் கோழி இறகினால் தொட்டு தீப்புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் 15 நாட்களில் குணமாகும். (ஆதாரம்நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)

 

02.   கற்றாழைச் சோற்றைத் தோல் வறட்சிக்கு, தடவிக் குளிக்கலாம். தீப் புண்களுக்கு இதனுடைய சாற்றைத் தடவி வரலாம்.

 

03.   காப்பிக் கொட்டையை  அரைத்துக் கொதிக்க வைத்து ஓரிரு துளிகள் தீப் புண் மீது விட்டு  வர, தீப்புண் விரைவில் ஆறும். (1040)(1162)

 

04.   துளசிச் சாறுடன் சிறிது தேன் கலந்து தீப் புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைந்து ஆறும்.  (1760)

 

05.   தேள்கொடுக்குச் செடியின் இலையை பயன்படுத்தி தீக்காயங்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலைப்பசையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும். இது தீக்காயம்,ஆறாத சீழ் பிடித்த புண்களைக் குணமாக்கும்.

 

06.   பப்பாளிப்  பாலைத் தீப்புண்களின் மீது தடவி வந்தால் தழும்புகள் வராது.

 

07.   மாசிக்காயைத் தண்ணீர் விட்டு அரைத்துத் தடவினால், தீப்புண்கள் விரைந்து குணமாகும்.

 

08.   வாழை இலை ஒரு சிறந்த நஞ்சு முறிப்பான்.  தீக்காயம் பட்ட இடத்தில் வாழை இலையை வைத்துக் கட்டுவதால், காயம் சீக்கிரத்தில் ஆறும்.

 

09.   வாழை இலைக் குருத்தை விரித்துப் புண் மீது கட்டலாம். கொப்புளங்கள் உருவாகாமல் தீப்புண் குணமாகும் (1041)

 

10.   வாழைக் குருத்தைப் பிரித்து தீயினால் ஏற்பட்ட புண்களின் மீது கட்டினால், கொப்பளங்கள் தோன்றாமல் ஆறும் 

 

11.   வாழைப் பட்டைச் சாற்றினைத் தீக் காயங்களுக்குப் பிழியலாம் புண்கள் விரைவில் குணமாகும். (1629)

 

12.   வெந்தயத்தை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் எரிச்சல் குறைந்து புண்கள் ஆறும்.

 

13.   வேப்பங் கொட்டையை நீர்விட்டு நன்றாகக் காய்ச்சி இறக்கி, அந்நீரைக் கடைந்தால் நுரை வரும். நுரையை மட்டும் தீப் புண் மீது பூசி வந்தால் தீப் புண் வடு மறையும். (1037)

 

14.   வேப்பங் கொழுந்தைப் பசு மோர் விட்டு அரைத்து, தீப்புண் மீது பூசிவர, தீப் புண் விரைவில் ஆறும்.(1038)

 

15.   வேப்பம் பட்டையை இடித்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி அதைத் தீப் புண் மீது பூசி வர, தீப்புண் விரைவில் ஆறும். (1039) (1877)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

 

==========================================================