01. களாச் செடியின்
வேரை ஐம்பது கிராம் எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி. ஆகக் காய்ச்சி
வடிகட்டி காலை மாலை 50 மி.லி ஆகக்கொடுக்க மகப் பேற்றின் போது
ஏற்படும் கருப்பை அழுக்குகள்
வெளிப்படும்.
02. குழந்தை பிறந்த பிறகு, வாழைக் குருத்தை அறுத்து வந்து நெருப்பில் போட்டுச் சுட்டு, குருத்துச் சாம்பலை எடுத்து, பனை வெல்லத்தில் கலந்து பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு வாயில் போட்டுச் சப்பிச் சாப்பிட வேண்டும். நாள்தோறும் காலை மாலையாக ஏழு நாள்கள் தர வேண்டும். இதன் மூலம் குழந்தை பிறந்த பிறகு உப்பி இருக்கும் வயிறு சுருங்கும். அழுக்குகள் வெளியேறும்.
03. சதகுப்பை இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அரை லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி யாக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, பிள்ளை பெற்ற பெண்ணுக்குக் கொடுத்து வந்தால், கருப்பை அழுக்குகள் வெளியேறும். உதிரச் சிக்கல் தீரும்.
04.
தவசி முருங்கை இலைச்சாற்றைப் பிழிந்து
20 மி.லி. அளவு
மூன்று நாட்கள் கொடுக்க,
பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.
05.
முடக்கத்தான் இலைகளை வதக்கி
அடிவயிற்றில் கட்டினால், சூதகத்தை
மிகுதிப்படுத்தி சூலக அழுக்குகளை வெளிப்படுத்தும்
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================