01. ஆலம் பட்டையைப் பட்டுப் போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேக நோய் குணமாகும். (626)
02. ஆலம் வேர்ப் பட்டை, ஆலம் நடுமரப்பட்டை, ஆலம் மொட்டு, ஆலங்கொழுந்து, ஆலம் பழம், ஆலம் விழுது ஆகியவற்றை வகைக்கு 40 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி தினசரி இரு வேளை குடித்து வந்தால் மேகப் புண், மேக எரிச்சல், குணமாகும். (613)
03. மாந்தளிரை உலர்த்திப் பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் மேக நோய் குணமாகும். (584)
04. முருங்கைப் பூவைப் பக்குவம் செய்து உண்டால் மேக நோய் குணமாகும். (591)
05. வாதநாராயணன் இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மேக நோய் குணமாகும். (590)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================