மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

கருப்பை - வெள்ளை படுதல்.

01.   அவரி வேர் 20 கிராம், பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கரைத்துக் கொடுத்தால் வெள்ளை படுதல் குணமாகும்.(608)

 

02.   அன்னாசிப் பழமொரு தினமும் துண்டு சாப்பிட்டு வந்தால் வெள்ளை படுதல் குணமாகும். (604)

 

03.   ஆலமரத்தின்  வேர்ப் பட்டை, ஆலமரத்தின் நடுமரப் பட்டை, ஆலம் மொட்டு, ஆலங் கொழுந்து, ஆலம் பழம், ஆலம் விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, இரு வேளை குடித்து வர வெள்ளை படுதல் குணமாகும்.(613)

 

04.   சிறுசெருப்படை இலைச் சாறு, வெங்காயச் சாறு சம அளவுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து நன்கு வடிகட்டி காலை மாலை குடித்து வர இரண்டொரு முறை பேதியாகும். ஆனால் சிரங்கு, வெள்ளை படுதல் குணமாகும்.(620)

 

05.   சோற்றுக் கற்றாழை மடலை எடுத்துத் தோல் சீவி, உள்ளே உள்ள சோற்றினை எடுத்துக் கூழாக்கி, மோரில் கலந்து குடித்தால் வெள்ளை படுதல் விலகிவிடும். (587)

 

06.   பசலைக் கீரையை உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளை படுதல் குணமாகும். (605)


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================