மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 3 ஜூன், 2021

குடல் - புண் (Ulcer)

 

01.   அகத்திக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து வந்தால், குடற் புண் குணமாகும். வயிற்றுப் புழுக்களும் நீங்கும்.(686)

 

02.   அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து குழந்தைகளுக்கு சுண்டைக் காயளவு கொடுத்து வந்தால் குடற் புண் சரியாகும். (721)

 

03.   அம்மான் பச்சரிசி எடுத்து அடைத்து சுண்டைக் காயளவு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற் புண் சரியாகும். (721)

 

04.   இளநீர் காலையில் வெறும் வயிற்றில் எடுத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், குடற்புண்கள் ஆறும். சகலவிதமான சரும நோய்களும் நீங்கும்.(1002)

 

05.   இளநீர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற் புண்கள் ஆறும். உடல் சூடு தணியும். (சளித் தொந்தரவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்) (786)

 

06.   எழுத்தாணிப் பூண்டு இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து நன்கு அரைத்து உள்ளுக்குக் கொத்தால், நன்கு மலம் வெளியேறும். குடல் வெப்பம் நீங்கி, குடற்புண்கள் ஆறும்.(679)

 

07.   கசகசா அரைப் பிடி எடுத்து வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். [ உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து காலை, மதியம், மாலை ஐந்து மணி அளவில் என்று மூன்று வேளைகள் ] உடனே பனங்கற்கண்டு அரைப் பிடி எடுத்து வாயில் போட்டு எச்சில் ஊற ஊற எச்சிலை விழுங்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் மொந்தன் பழம் அல்லது பூவன் பழம் பாதிப்பழம் எடுத்து தோலை உரித்து விட்டு சுளை மீது ஆலம் பாலைத் தடவி வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கி விட வேண்டும். 12 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வாய்ப் புண், வாய் நாற்றம், குடற் புண் ஆகியவை குணமாகும். சாப்பாட்டில் அரைப்புளி, அரை காரம் சேர்க்கலாம். மோர் நிரம்ப அருந்த வேண்டும். இனிப்பு கூடாது.ஒரு மாதம் இவ்வாறு பத்தியம் கடைப்பிடிக்கவும். (ஆதாரம்: ” நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல்)

 

08.   கற்கண்டு [பொடித்தது] 150 கிராம் எடுத்து, நீர் விட்டு, கிளறி, 15 கிராம் கடுக்காய்ப் பொடி கலந்து, காலை மாலை  அரைத் தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொண்டால், குடல் புண், சுவாச காசம், மூலம், வாதம் கட்டுப்படும்.

 

09.   குங்குமப் பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குடல் புண் குணமாகும். (174)

 

10.   குங்குமப் பூவை இடித்துத் தூள் செய்து சம அளவு தேன் கலந்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளைகள்  சாப்பிட்டு வர வேண்டும். இதனால் குடல் புண் குணமாகும்.   சுவாசக் குழாய் அலர்ஜி இருந்தால் அதுவும் குணமாகும். (711) (174)

 

11.   சீரகப் பொடி ஒரு தேக்கரண்டி, சிறிது வெண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து நெல்லிக் காய் அளவு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடற்புண் (அல்சர்) குணமாகும்.

 

12.   தான்றிக் காய், கடுக்காய், நெல்லிக்காய், தென்னம் பாளை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் சாப்பிடலாம். குடல் புண் ஆறும்.

 

13.   திராட்சைப் பழச் சாறு தினசரி ஒரு தம்ளர் சாப்பிட்டு வந்தால் குடற் புண் (அல்சர்) குணமாகும். (321) (664) (1146)

 

14.   துத்திக் கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்க்கரை கலந்து குடித்து வந்தால் குடற்புண்ணால் வேதனைப் படுகின்றவர்கள் பூரண குணம் பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டைக் கம்மல் சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்துக் குணமடையலாம்.

 

15.   தென்னம் பூவை மென்று தின்று வந்தால் குடற் புண்கள் ஆறும்.உள் ரணம் கூட குணமாகும்.(293)

 

16.   நாவற்பழம் நீரிழிவைக் கட்டுப் படுத்தும்; குடற்புண்ணை நீக்கும். (1209)  (1240) (1293)

 

17.   நெல்லிக் காயுடன் பசுவின் சிறுநீர் சேர்த்து அரைத்து, பிழிந்து வடிகட்டி குடிக்கக் கொடுத்தால் குடற் புண் குணமாகும்.(723)

 

18.   மஞ்சளை எடுத்து வறுத்துக் கரியானவுடன் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் குடற் புண் குணமாகும்.(685)

 

19.   மணித் தக்காளிக் கீரையைச் அடிக்கடி சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால் குடல் புண் குணமாகும். (683)

 

20.   முட்டைக் கோசினை நறுக்கிச் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரைப் பருகி வர வேண்டும். இதனால் குடல் புண் குணமாகும். (714)

 

21.   வாழைக் காய் பிஞ்சாக இருக்கும் போது பறித்து வந்து சமைத்துச் சாப்பிட்டு வர வேண்டும். குடல் புண் குணமாகும்.( 710)

 

22.   விளாங் காயைத் தயிருடன் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால், வாய்ப் புண், குடற் புண் (அல்சர்) ஆகியவை குணமாகும்.

 

23.   வில்வப் பழத்தைப் பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.  (1747)

24.   வெந்தயத்தை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்கள். இதயம் மேம்படும். புற்று நோய், கல்லீரல் பாதிப்புகளை நீக்கும். மூட்டு வலியைக் குறைக்கும். உடல் குளிர்ச்சி அடைந்து, சூடு தடுக்கப்படும். எடை குறையும். செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல், குடல் புண் (அல்சர்) வராமல் தடுக்கும்.

  

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )20]

{03-06-2021}

==========================================================