01. எருக்கு இலைகளைக் (பழுத்த இலைகள்) கொண்டு வந்து , நெருப்பில் காட்டி வாட்டி, பக்குவமாக வாட்டமடைந்த பின் உள்ளங் கையில் வைத்துக் கசக்கிச் சாறு பிழிந்து ஐந்தாறு சொட்டுகள் சீழ் வரும்காதில் விட வேண்டும். இதேமாதிரி காலை மாலை ஏழு நாள்கள் மருந்தை காதில் விட்டுன் வந்தால் காதில் சீழ் வருதல் நிற்கும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்)
02. எருக்கம் பழுப்புச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை
லிட்டர் கலந்து, வசம்பு, பெருங்காயம், இலவங்கப் பட்டை, பூண்டு வகைக்கு 10 கிராம் தூள் செய்து கலக்கிப் பதமுறக் காய்ச்சி, ஆற வைத்து
வடிகட்டி ( இதன் பெயர் எருக்குத் தைலம் ) நான்கு துளி காதில் விட்டு வரச் சீழ் வடிதல், நாற்றம், இரத்தம் வடிதல், வலி ஆகியவை தீரும். { எருக்கு மருந்து சிறுவர்களுக்கு ஆகாது. ஏதேனும்
வேதனை இருப்பின் நல்லெண்ணெய் தான் அதற்கு முறிப்பு }
03. கடல் நுரை, வேப்பிலைச் சாறு, தேன் மூன்றையும் 1: 6 : 6 கிராம் வீதம் சேர்த்து அரைத்து வடிகட்டி இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் நிற்கும். புண்கள் இருந்தால் குணமாகும். (060)
04. கரிசலாங்கண்ணிச் சாறு, துளசிச் சாறு இரண்டும் கலந்து இரண்டு மூன்று துளிகள் காதில்
விட்டு வந்தால், காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை நிற்கும்.(308)
05. திருநீற்றுப்
பச்சிலை இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர
காது வலி காதில் சீழ் வடிதல் முதலிய நோய்கள் குண்மாகும்.
06. துளசிச் சாறு, கரிசாலைச் சாறு இரண்டும் கலந்து ஓரிரு துளிகள்காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் குணமாகும்.(308)
07. தூதுவேளை
இலையைப் பிழிந்து எடுத்து சாற்றை 1 அல்லது 2
துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
08. நல்லவேளை இலைச் சாறு ஓரிரு துளிகள் காதில் விட சீழ் வடிதல் நிற்கும்.(079)
09. நாயுருவி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறு பிழிந்து, இரண்டொரு துளிகள்
காதில் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் குணமாகும். (063) (079) (1301)
10. மாதுளம் பழச் சாறை சிறிது சூடு படுத்தி ஓரிரு துளிகள் காதில் விட்டால், காதில் சீழ் வடிதல் நிற்கும்.
11. முடக்கத்தான் இலைச் சாறில் சீரகப் பொடியைப் போட்டு ஊறவைத்து சில துளிகள் காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் சீராகும். (061)
12. முடக்கத்தான் இலைச் சாற்றைக் காதில் விட, காது வலி, சீழ் வடிதல் ஆகியவை நீங்கும்
13. வாழை மரத்தின் கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, இலேசாக சூடு படுத்தி, பொறுக்கும் சூட்டில் ஐந்தாறு சொட்டுகள் காதில் விட வேண்டும். இது போல் காலை மாலையாக மூன்று நாட்கள் செய்தால் காதில் சீழ் வடிதல் நிற்கும். (ஆதாரம்: “ நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல்)
14. வேளை (நல்ல
வேளை) இலைச் சாறு ஓரிரு துளிகள் காதில்விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் குணமாகும்.
(074) (1817)
15. வேப்பிலைச் சாறு, கடல் நுரை, தேன் மூன்றையும் 6 : 1 : 6 கிராம் வீதம் எடுத்து அரைத்து வடிகட்டி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் குணமாகும். காதில் புண்கள் இருந்தாகும் குணமாகும்.
(060)

=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}