காது – இரைச்சல் (Autopsy)
01. வசம்பைச் சுட்டால் புகை வரும். இந்தப் புகையைக் காதினுள் செல்லுமாறு ஊது குழல் மூலம் ஊதினால் காது இரைச்சல் குணமாகும்.(067)
காது – எழுச்சி வலி
01.
எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில்
வசம்பு, பெருங்காயம், இலவங்கம்,
பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி
வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக் காதில் விட,
காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.
02. தூதுவேளை இலையைப் பிழிந்து காதில்விட, காதடைப்பு, காதெழுச்சி போகும். துவையல், குழம்பு செய்து உண்ண கோழைக் கட்டு அறும்.
காது – எறும்பு நுழைவு
01. காதுக்குள் எறும்பு, புழு, பூச்சி ஏதேனும் நுழைந்து விட்டால், அவற்றை வெளியேற்ற சிறிது உப்புக் கரைசலை தயாரித்து வடிகட்டி காதுக்குள் ஊற்ற வேண்டும். உள்ளே நுழைந்த பூச்சிகள் வெளியே வந்து விடும். (1979)
காது – கட்டி வருதல்
01. தூது வேளை இலைச் சாறு இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது அடைப்பை நீக்கும். காதில் கட்டிகள் ஏதும் இருந்தால் குணமாகும். (056)
காது – குடைச்சல்
01. எலுமிச்சம் பழச் சாறு இரண்டு மூன்று சொட்டுகள் காதில் விட, காது குடைச்சல் தீரும் (065)
02. பனை மரத்தின் பட்டையை (கருக்கு மட்டை) எடுத்து நெருப்பில் பதமாகக் காட்டிச் சூடேற்றவும். பிறகு அதை முறுக்கிப் பிழிந்தால் சாறு வரும். அந்தச் சாறைப் பாலாடையில் பிடித்து மூன்று நான்கு சொட்டுகள் காதில் விடவும். இதை காலை மாலை என மூன்று நாட்கள் செய்யவும். இவ்வாறு செய்தால் காது குடைச்சல், காது சம்பந்தமான அனைத்து நோய்களும் பறந்து விடும் (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் )
03. வாழை மரத்தின் கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, இலேசாக சூடு படுத்தி, பொறுக்கும் சூட்டில் ஐந்தாறு சொட்டுகள் காதில் விட வேண்டும். இது போல் காலை மாலையாக மூன்று நாட்கள் செய்தால் காது குடைச்சல் தீரும். காது சம்பந்தமான எல்லா நோய்களும் தீர்ந்துவிடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )
காது – செவிடு
01. வெள்ளாட்டுப் பால், நல்லெண்ணெய், வில்வக் காய், பசு மூத்திரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, காய்ச்சி, ஆற வைத்து தினசரி சில சொட்டுகள் காதில் விட்டு வர காதின் செவிட்டுத் தன்மை நீங்கும். (059)
காது – துளையில் புண்
01. குழந்தைகளுக்குக் காது குத்துவது என்பது நடைமுறைப் பழக்கம். காது குத்திய இடத்தில், துளையில் சில குழந்தைகளுக்குப் புண்ணாகிவிடும். அப்படிப் புண்ணாகி விட்டால் கடுக்காயை நீர் விட்டுக் கல்லில் தேய்த்தால் குழம்பு போன்று வரும். அந்தக் உழம்பைத் தொட்டு புண் மீது வைக்க வேண்டும். ஒன்று விட்டு ஒரு நாள் இவ்வாறு செய்தால் புண் ஆறிவிடும்.
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================