மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தாய்ப் பால் - சுரப்பு மிக (Baby Milk Secretion )

 

01. அம்மான் பச்சரிசிச் செடிகளைப் பிடுங்கி வந்து, சுத்தம் செய்து, ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மூன்று வெற்றிலைகளுடன் வைத்து அரைத்து, ஒரு சுண்டைக்காய் அளவு வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை மாலை இரு வேளை வீதம் ஏழு நாள்கள் இவ்வாறு செய்தால் தாய்ப் பால் போதுமான அளவு சுரக்கும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

02. அம்மான் பச்சரிசிச் செடியை பூவுடன் பறித்து 30 கிராம் எடுத்து அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு பாலில் கரைத்து ஒரு வாரம் கொடுக்க, தாய்ப் பால் பெருகும்.

 

03. அம்மான் பச்சரிசிச் செடியை வேருடன் பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து. இரண்டு வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து காலை மாலையாக ஏழுநாட்கள் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் தாய்ப்பால் நன்கு ஊறும்.

 

04. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்துக் கஞ்சி வைத்து குழந்தை பெற்ற தாய்மார்கள்  சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகமாகும்.

 

05. ஆரைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் பெருகும். (!754)

 

06. ஆலம்விழுது துளிரையும்  விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.

 

07. எருமைத் தக்காளி இலைகளை அரைத்து சிறிது வினிகர் சேர்த்து அத்துடன் அரை தேக்கரண்டி திப்பிலித் தூள் சேர்த்து மார்பில் பற்றுப் போட்டு வந்த்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு பெருகும்.

 

08. எலியாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையைப் போட்டு வேகவைத்து, இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒற்றடம் கொடுத்து, வெந்த இலைகளை வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.

 

09. கல்யாண முருங்கை இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் (தேங்காயெண்ணெய்) விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பூப்பு எய்தாத பெண் குழந்தைகள் பருவமடைவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

 

10. காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையைப் போட்டு வேகவைத்து, இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்துமார்பில் ஒற்றடம் கொடுத்து, வெந்த இலைகளை வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்

 

11. சதகுப்பைப் பொடி, அமுக்கரா சூரணம் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டல் தாய்ப் பால் சுரப்பு மிகுதியாகும்

 

12. சதகுப்பைப் பொடி, அமுக்கரா சூரணம் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டல் தாய்ப் பால் சுரப்பு மிகுதியாகும்

 

13. தாளிக் கீரை இலைகளைக் கொதி நீரில் போட்டு, சற்று நேரம் கழித்து இலைகளை எடுத்து பிழிந்து விட்டு, கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் ஊறும். (1553)

 

14. திப்பிலிப் பொடி கால் தேக்கரண்டியுடன் சம அளவு மிளகுத் தூள் சேர்த்து வெது வெதுப்பான பாலில் கலந்து அருந்தி வந்தால் பெண்களுக்குப் பால் சுரக்கும்.

 

15. நத்தைச் சூரி வேரை பத்து கிராம் எடுத்து  பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிக்கட்டிக் காலை மாலை கொடுத்து வரத் தாய்ப் பால் பெருகும்.

 

16. நூல்கோலை இளம் பிஞ்சாக எடுத்து சமைத்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு மிகுதியாகும்.(1172)

 

17. பச்சைக் கோரைக் கிழங்கினை அரைத்து மார்பகத்தில் பூசி வந்தால் பால் சுரப்பு மிகுதியாகும்.

 

18. பப்பாளிக் காயைப் பிரசவித்த பெண்கள் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்

 

19. பால் பருத்தி இலையைப் பறித்து வந்து சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பால் சுரப்பு மிகுதியாகும்.(602)

 

20. பால் பெருக்கி இலையை அரைத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் தாய்ப் பால் சுரப்பு மிகுதியாகும்.  (1446) (1972)

 

21. முருங்கைக் கீரையைப் பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் , பால் நன்றாகச் சுரக்கும்.

 

22. வெந்தயத்தை முளைகட்டி உட்கொண்டு வந்தாலும் பால் சுரப்பு மிகுதியாகும்

 

23. வெந்தயத்தைச் அரிசியுடன் சேர்த்துக் கஞ்சி வைத்து குழந்தை பெற்ற    தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகமாகும்

 

24. வெந்தயப் பொடி சேர்த்த தேநீரை அருந்தினால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு மிகுதியாகும். வெந்தய விதையில் இருக்கும் பைபோ ஈஸ்ட்ரோஜன் இதற்கு உதவும்.

 

25. வெந்தயமும் கருப்பட்டியும்  சேர்த்து உளுந்துக் களி செய்து சாப்பிட்டாலும் பால் சுரப்பு மிகுதியாகும்.

 

26. வெந்தயக் கஞ்சி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்குத் தாய்ப் பால் பெருகும்.  (1280) (2024)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================