01. அத்திப் பழத்தை அப்படியே காலை மாலை சாப்பிட்டு, பால் அருந்தலாம். பதப்படுத்தி - ஐந்து நாட்கள் நிழலில் உலர்த்தி – தேனில் போட்டு ஊறவைத்துச் சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10 – 15 கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்த்தாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.
02. அரசம் பழத்தைச் சேகரித்து உலர்த்திப் பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பொடியை எடுத்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் தாது பலம் பெருகும்.(501)
03. இலவங்கப் பட்டையை வாரத்தில் இருமுறை உணவுடன் பயன்படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். தாது விருத்தி ஆகும்.(796)
04. கசகசாவை வறுத்து தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து வந்தால் தாது பலம் மிகும்.(469)
05. கருவேலம் பிசினைச் சுத்தம் செய்து காய வைத்து இலேசாக வறுத்து தூள் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு தாது புஷ்டியாகும்.(496)
06. கழற்சிக் காய் விதைகளை அரைத்து பொடியாக்கி கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால் தாது கெட்டிப்படும்.(472)(1803)
07. கறிவேப்பிலையை துவையல் செய்து தினமும் உணவுடன்சேர்த்து வந்தால் உடல் வளர்ச்சி அடையும். கண் பார்வை தெளிவடையும். தாது விருத்தி அடையும்.(044)
08. காரை இலையை வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும். இரைப் பை வலிமை பெறும்.(473)
09. கானவாழை சமூலம், தூதுவேளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் ( 48 நாள் ) சாப்பிட்டு வரத் தாது பலப்படும்..
10. குங்குமப்பூவைப் பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தியாகும்
11. கொடிவேலி வேரை எடுத்து வந்து இடித்து, பாலில் காய்ச்சி, 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கெட்டுப் போயிருக்கும் தாதுவைச் சரிப்படுத்தும்.(478)
12. கோரைக் கிழங்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து காலை மாலை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி, புத்தி கூர்மை, உடற் பொலிவு உண்டாகும்.(476)
13. சாதிக்காய்ப் பொடி, பிரண்டை உப்பு இரண்டையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.(1450)
14.
சீரகப் பொடி, வில்வப் பட்டைப் பொடி இரண்டையும் சேர்த்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தாது வீரியம் உண்டாகும். (487)
15.
செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து இருப்பதால் செம்பருத்திப் பூவின் கஷாயம் தாது விருத்திக்கு மிகவும் சிறந்ததாகும்.
16. செம்பருத்திப் பூவினை தினமும் 10 எடுத்து மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.
17. தாளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து உணவாக்கிச் சாப்பிட்டு வந்தால் தாது பலப் படும். (1552)
18. துரியன் பழம்
சாப்பிட்டு வந்தால்
தாது உற்பத்தி பிரம்மாண்டமாக அதிகரிக்கும். (498) (1189) (1923)
19. துளசி விதைப் பொடியைத் தாம்பூலத்துடன் சேர்த்துச் சுவைத்தால் தாது பலப்படும். (1399)
20. தென்னம் பாளையில் (வெடிக்காத பாளை) உள்ள பிஞ்சுகளை எடுத்து பசும் பால் விட்டு அரைத்து வேளைக்கு 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.(1420) தாது மிடுப்பு உண்டாகும்.(1435) விரைவாதம் நீங்கும்.(1458)
21. தேங்காய்ப் பால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்; தாது விருத்தியாகும். (509)
22. நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை ஆகியவற்றைச் சிதைத்து நீர் விட்டுக் கசாயம் செய்து பனங் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் தாது பலம் உண்டாகும் (1411)
23. நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிதைத்து பனங்கற்கண்டு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடலில் உள்ள துர்நீர் நீங்கும். (1370)
தாது பலம் உண்டாகும். (1411)
24. பலாக் கொட்டைகளை அவித்து, வெயிலில் காயவைத்து, பொடி செய்து அதை கருப்பட்டி அல்லது பன்ங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். (503)
25. மகிழம் பழ விதைப் பருப்பை பொடி செய்து 5 கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். (1452)
மலக் கட்டு, நஞ்சு தீரும். (1487)
26. முந்திரிப் பருப்பை அடிக்கடி உண்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
(768)
27. முருங்கைப் பிசினை உலர்த்திப் பொடி செய்து, அரை தேக்கரண்டி, பாலில் காலை மாலை கொள்ள தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.
28. முருங்கைப் பிசினைப் பொடி செய்து அரை கரண்டி பாலில் கரைத்து காலை, மாலை அருந்தி வந்தால் தாது பலம் உண்டாகும். (1620)
29.
முருங்கைப் பூக்களைப் பறித்து சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி, சிறிது பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தி ஆகும். (479)
30. முருங்கை இலைப் பொரியலுடன் நெய் சேர்த்து உணவுடன் 48 நாட்கள் உட்கொண்டு வந்தால் தாது விருத்தியாகும். (1570)
31. முள்ளங்கி விதையைப் பொடி செய்து கற்கண்டு சேர்த்து தினசரி 2 வேளை வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.(494)
32. வாதுமைப் பருப்பு நான்கினை பாலுடன் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியும் உடல் பலமும் உண்டாகும்.
(521)
33. வில்வ வேர்ப் பட்டை 10 கிராம், சீரகம் 1 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் தாது பலப்படும். (1534)
34. வில்வ மரப் பட்டை, சீரகம் இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட்டு வந்தால் தாது வீரியம் உண்டாகும். (487)
35. வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை ஆகியவற்றை சிதைத்து கசாயம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் தாது பலம் உண்டாகும்.
(1411)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]
{01-07-2021}
==========================================================