01. அகத்திக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.(956)
02. அகத்திக் கீரையை நாள்தோறுமின்றி, வேண்டும் போது கறியாகச் சமைத்துண்ண இது உடலில் எழும் பித்தத்தைத் தணிக்கும்.
03. அத்தி மர வேரிலிருந்து இறங்கும் கள்ளில், வெல்லம் பேயன் வாழைப் பழத்தோடு விடியற்காலையில் உட்கொள்ள எலும்பைப் பற்றிய மேகம், உட்சூடு, பித்த மயக்கம், நீர்வேட்கை தீரும்.
04. அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை
கலந்து, காலை மாலை கொடுத்து வர
நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்
போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து
போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
05. அத்திப் பால் 15 மி.லி யுடன் வெண்ணெய் சர்க்கரை
கலந்து, காலை மாலை கொடுத்து வர
நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப்
போக்கு, பெரும்பாடு, சிறு நீரில் குருதி கலந்து
போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
06. ஆலமரத்தின் கிளைகளில் உள்ள குச்சிகளைத் துண்டுகளாக்கி, நீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி, தேன்
கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். (539)
07. இஞ்சி – எலுமிச்சம் பழச் சாற்றில் சீரகத்தைக் கலந்து, ஒரு நாள் ஊறவைத்து, ஊறிய சீரகத்தை தினமும் இரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சரியாகும்.
08. எலுமிச்சஞ் சாதம் வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் குறையும்.(799)
09. எலுமிச்சம் சாதத்தை வாரத்தில் மூன்று நாள் காலை உணவாகக் கொண்டால்,
பித்தத்தைத்
தணிக்கும் (799)
10. எலுமிச்சம்பழச் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி சீரகத்தையும், மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரை தேக்கரண்டி பொடியை வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் பித்தம் குறையும்.
11. ஏலம், சீரகம், கொத்துமல்லிப் பொடிகளுடன், சிறிதளவு கருப்பட்டி சேர்த்து ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
12. கடுகு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து, தினமும் காலையில் சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெந்நீர் அருந்தினால் பித்தம், கபம், நீங்கும்.
13. கடுக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி தலா 10 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து காலை மாலை அரைத் தேக்கரண்டி வீதம் 21 நாட்கள் சாப்பிட்டால், வாத நோய், பித்த நோய்கள் கட்டுப்படும்.
14. கமலா ஆரஞ்சுப் பழம் உட்கொண்டு வந்தால் பித்தக் கோளாறுகளை நீக்கும்.(1231)
15. கொத்துமல்லிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து பருகினால் பித்தம் தணியும்.
16. கொய்யாப் பழத்துடன் [ நன்றாகப் பழுத்த பழம் ], மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம், சோர்வு நீங்கும்.
17. சுக்குப் பொடியுடன் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் தீரும்.
18. சீதேவி செங்கழுநீர் சமூலத்தைக் குடிநீராக்கி (கசாயம் செய்து) அருந்தி வந்தால், பித்தநீர் நீங்கும்.(1319)
19. தான்றிக் காய்ப் பொடியுடன் சம அளவு சர்க்கரை சேர்த்து வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்தால் பித்தம் சீராகும்.
20.
தூதுவேளை இலைப் பொடியை பசும்பாலில் சேர்த்து
சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.
21. நாரத்தை இலையை உணவோடு சேர்த்துக் கொண்டால் வாந்தி, பித்தக் கோளாறுகள் நீங்கும்.(286)
22. நெல்லிக் காயை இடித்து, 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி, 20 மி.லி தேன் கலந்து வேளைக்கு 40 மி.லி வீதம் 4 நாட்கள் சாப்பிட்டால் மிகு பித்தம் தணியும்.
23. பனங் கிழங்கினை அவித்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தை நீக்கி உடல் பலத்தை அதிகரிக்கும்
24. பொன்னாங் கண்ணிக் கீரை, பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்
25. மாதுளம் பழம் பித்த சம்பந்தமான குறைபாடுகளுக்கு மிகச் சிறந்த நிவாரணி ஆகும்.
26. மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடி கலந்து உட்கொண்டால் பித்தம் தணியும்.
27. ரோஜாப்பூக் கசாயம் வைத்து பால், சர்க்கரை கூட்டி
சாப்பிட்டு வந்தால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். (1615)
28. விளாம் பழத்துடன் பனங்கற் கண்டைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் ஆகியவை நிற்கும்.
29. விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் உடம்பில் பித்தம் குறையும்.(720) (1867)
30. வெந்தயத்துடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் விலகும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================