01. உடலில், கை கால்களில் ஏற்படும் காயங்கள் சில நேரங்களில் புண்ணாகித் தொல்லை தரும். இதற்கு, காதறுந்த பழைய தோல் செருப்பை
எடுத்துக் கையகலம் துண்டித்து நெருப்பில் போட்டுச் சுடவேண்டும். சுட்ட தோல் சாம்பலானதும் அதை எடுத்து அரைத் தேக்கரண்டி
அளவுக்கு உள்ளங் கையில் வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து, புண் மீது தடவ வேண்டும். நாள்தோறும் மூன்று வேளைகள் வீதம் ஏழு நாள்கள் இவ்வாறு செய்தால் ஆறாத புண் கூட ஆறி விடும். (ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல் )
02. ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி. தேங்காய் எண்ணெய் 500 மி.லி. கலந்து மயில்
துத்தம் 30 கிராம் போட்டு சுண்டக் காய்ச்சி சாறு வடிக்கவும் இதனை
அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும். ஆறாத குழிப்புண், குணமடையும்.
03. சாணக் கீரை ஆறாத புண்களை ஆற்றும் வல்லமை உடையது (460)
04. தேள்கொடுக்குச் செடியின் இலையை பயன்படுத்தி
தீக்காயங்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலைப்பசையுடன் தேங்காய்
எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும். இது தீக்காயம், ஆறாத சீழ் பிடித்த புண்களைக் குணமாக்கும்.
05. தொட்டாற் சுருங்கி இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட் செலுத்தி வைக்க ஆறிவரும்.
06. ஓமம் அறுகம் புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் நாட்பட்ட புண்கள் ஆறும்.
07. கருங்காலிப் பட்டை, வேப்பம்பட்டை, நாவல்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து நாள்பட்ட புண்கள் மீது தடவி வந்தால், அவை விரைவில் ஆறிவிடும்.
08. வேப்பிலையை நீர் விட்டு அரைத்து களி போல் கிண்டி மேலுக்குப் போட வீக்கம், நாட்பட்ட புண், தோலைப் பற்றிய புண் நோய்கள் தீரும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================