01. கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி. லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி ( T.B ),ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் (மூக்கடைப்பு) தீரும்
02. கீழா நெல்லிச் சாறு , உத்தாமணிச் சாறு, குப்பைமேனிச் சாறு சம அளவு கலந்து நல்லெண்ணையில் விட்டுக் காய்ச்சி, நசியமிட (மூக்கில் சில துளிகள் விட்டால்) பீனிசம், (மூக்கடைப்பு) ஓயாத தலைவலி, நீர் வடிதல் ஆகியவை தீரும்.
03. தவசி முருங்கை இலைச்சாற்றை 15 மி.லி காலை மாலை சாப்பிட்டு வர பீனிசம், (மூக்கடைப்பு) சளி, இரைப்பிருமல், ஆகியவை தீரும்.
04. திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், (மூக்கடைப்பு )நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.
05. நொச்சி இலையை மெல்லிய துணியில் திணித்து தலையணையாகப் பயன்படுத்தினால், மண்டை இடி, கழுத்து
வீக்கம், கழுத்து நரம்பு
வலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) தீரும்.
06. மிளகுப் பொடி அரை கிராம் எடுத்து ஒரு கிராம் வெல்லம் அத்துடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், (மூக்கடைப்பு) தலை பாரம், தலைவலி தீரும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]
{07-07-2021}
==========================================================