01.
அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்
பட்டை, மாதுளம் பழ ஓடு ஆகியவற்றின் சூரணம் சமனளவு எடுத்து
மூன்று சிட்டிகை காலை மாலை வெந்நீரில் சப்பிட்டு வந்தால் 100 – 120 நாட்களில் பெண் மலடு நீங்கும்.
02. ஆமணக்கு எண்ணை சிறிது எடுத்து இரண்டு கிராம் திப்பிலிப் பொடியை கலந்து, குழந்தை வேண்டும் பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளில் இருந்து 6 நாட்கள் சாப்பிட்டு, வெது வெதுப்பான நீர் அருந்தினால், ஆரோக்கியமான சினை முட்டை உருவாகும்.
03.
இலந்தை இலை ஒரு பிடி, மிளகு ஆறு
எண்ணிக்கை, பூண்டுப் பல் நான்கு எண்ணிக்கை எடுத்து, அரைத்து மாத
விலக்கு ஆன முதல் இரண்டு நாட்கள் கொடுத்து வர, கருப்பைக்
குற்றங்கள் (மலடு) நீங்கிக் குழந்தைப் பேறு கிட்டும்.
04.
கல்யாண முருங்கை இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள்
குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும்.
05. மஞ்சள் தூள் (தூய்மையானது) 4 சிட்டிகை எடுத்து 30 மி.லி தண்ணீரில் கலந்து குழந்தை இல்லாத பெண்கள், மாதவிலக்கு ஏற்பட்ட மூன்று நாட்கள் வெறும் வயிற்றில், மூன்று வேளை குடித்தால், மலட்டுத் தன்மை நீங்கி, குழந்தைப் பேறு கிடைக்கும்.
06.
மணித் தாக்காளிப் பழம் பெண்கள் கருத்தரிக்க உதவும். இதைச் சாப்பிட்டு வந்தால், கருப் பை பலமடைந்து மகப்பேறு எளிதாக நடைபெற உதவும்.
07.
மாதுளை வேர்ப் பட்டை, மாதுளை மரப் பட்டை, மாதுளை விதை
சமனளவு எடுத்து, சூரணம் செய்து காலை மாலை மூன்று கிராம் வீதம்
வெந்நீரில் கொடுத்து வந்தால், கருப்பைக் கோளாறுகள் (மலடு) நீங்கி குழந்தைப்
பேறு உண்டாகும்.
08.
வேப்பங்கொழுந்து, வசம்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து, மகப் பேறு இல்லாத பெண்கள் மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிடவும். மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும்.
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப்
பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்
சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து
எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,கடகம் (ஆடி )16]
{01-08-2021}
==========================================================