01. அதிமதுரப் பொடி ஒரு கிராம் காலை மாலை சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால் மார்புச் சளி விலகும். இருமல், தொண்டை வலி நீங்கும்.(133)
02. அமுக்கிராங் கிழங்கைப் பொடி செய்து தினமும் இரவில் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம் வெளியேறும்.(144)
03. அழிஞ்சில் இலையை அரைத்து ஒரு கிராம் வீதம் காலை மாலை கொடுத்து வந்தால் கப நோய்கள், கிராணி, குன்மம் ஆகியவை நீங்கும்.(325)
04. அறுகம்புல் சாறு பருகி வந்தால் சளித் தொல்லை இருக்காது. (137) (1130)
05. ஆடாதொடை மணப்பாகு 10 மி.லி எடுத்து வெந்நீரில்
கலந்து தினசரி 3 வேளையாக தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால், மார்புச்சளி தீரும்.
06. ஏலக்காய்ப் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி குணமாகும். (134) (1300)
07. ஓமவல்லிச் சாறு இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மார்புச் சளி நீங்கும்.
08. கஞ்சாங்கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து
அரைத்து வெந்நீரில் கொடுத்தால் சளி தீரும்.
09. கஞ்சாங்கோரை இலைச்
சாறு 30 துளி பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க சளி
குணமாகும்.
10. கரிசலாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு
லிட்டர், அதிமதுரத் தூள் 40 கிராம் சேர்த்துப்
பதமுறக் காய்ச்சி, வடிக்கட்டி, காலை மாலை 5 மி.லி சாப்பிட்டு வந்தால் மார்ச் சளி
தீரும். இந்த எண்ணெயைத்
தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.
11. கருந்துளசி இலைகளை எடுத்துச் சாறு பிழிந்து இரண்டு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபக் கட்டு வெளியேறும்.(139)
12. கலவைக் கீரையை வாரம் இரண்டு முறை சமைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் கபத்தை உடைத்து வெளியேற்றும்.(189)
13. கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு, வகைக்கு 30 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம், அரை லிட்டர் நீரில்
போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி வீதம் கொடுத்து வர, மார்ச் சளி தீரும்.
14. கோவைக் கிழங்குச்
சாறு 10 மி.லி. காலை வேளை மட்டும்
குடித்துவர மார்ச் சளி தீரும்.
15. சங்கு இலைச் சாறு ( காக்கிரட்டை இலை ) எடுத்துப் பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்டி வந்தால் சளித் தொந்தரவு நீங்கும்.(171)
16. சிறு காராமணிப் பயரை வேகவைத்துச் சுண்டலாக்கிச் சாப்பிட்டு வந்தால் கபம் உடைந்து வெளியேறும்.(191)
17. சுண்டை வற்றலை உப்புக் கலந்த புளித்த மோரில் ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் வறுத்து இரவு மட்டும் உணவுடன் உண்டு வர மார்புச் சளி, ஆஸ்துமா நீங்கும். வயிற்றுப் போக்கு சரியாகும்.(128)
18. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம் மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறி வேம்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து
இடித்த சூரணம் காலை மாலை 2 சிட்டிகை மோரில் கலந்து சாப்பிட்டு வர மார்ச் சளி தீரும்.
19. சுண்டைக்காயை உப்புக்
கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்துக் காய வைத்து, எண்ணெயில் வறுத்துப்
பொடித்து இரவு உணவில் பயன்படுத்தி வந்தால் மார்ச் சளி
தீரும்.
20. சோம்பு, கொத்துமல்லி, பனைவெல்லம், சுக்கு ஆகியவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கழாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி, மார்பு எரிச்சல் ஆகியவை குணமாகும்.(169)
21. தழுதாழை இலைச் சாற்றை
மூக்கில் உறிஞ்சி வரச் சளி சிறிது சிறிதாகக்
குறையும்.
22. தூதுவேளை இலைச்
சாற்றில் சம அளவு நெய் கலந்து பதமுறக் காய்ச்சி வடிக்கட்டி, காலை மாலை 5 மி.லி சாப்பிட்டு வர மார்ச் சளி தீரும்.
23. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்துச் சுட வைத்து நெஞ்சில் தடவி வந்தால் குழந்தைகளைப் பீடிக்கும் நெஞ்சுச் சளி நீங்கும்.(1119)
24. பொடுதலை இலையுடன்
இஞ்சி, புதினா, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச்
சேர்த்து அரைத்து துவையல் செய்து சுடு சோற்றில் நெய்யுடன் உண்ண, மார்ச் சளி தீரும்.
25. மஞ்சள் தூளுடன் பனங்கற்கண்டு, ஏலப்பொடி சேர்த்துப் பாலில் கலந்து பருகி வந்தால் மார்புச் சளி குணமாகும்.
26. மணலிக் கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி நீங்கும். நுண்புழு விலகும்.(124)
27. மூக்கிரட்டை வேர் 30 கிராம், மிளகு 4 எண்ணிக்கை, உத்தாமணிச் சாறு 50 மி.லி. ஆகியவற்றை விளக்கெண்ணெயில்
இட்டுக் காய்ச்சி, ஆறவிட்டு, வடிக்கட்டி வைத்துக் கொண்டு 6 மாதக்
குழந்தைக்கு 15 மி.லி வீதமும், அதற்கு மேற்பட்ட
குழந்தைகளுக்கு 30 மி.லி வீதமும் வாரம் ஒன்று
அல்லது இரண்டு முறைக் கொடுத்து வர மார்ச் சளி
தீரும்.
28. வல்லாரை இலையுடன் தூதுவேளை சேர்த்து அரைத்து பாலில் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக் கட்டு நீங்கும்.(209)
29. வில்வ இலைகளைப் பறித்து வந்து அரைத்து மார்பு முழுவதும் பற்றுப் போட்டு வந்தால் கைக் குழந்தைகளின் மார்புச் சளி முற்றிலும் நீங்கும். இவ்வாறு காலையிலும் இரவிலுமாக மூன்று நாளகள் செய்ய வேண்டும். அத்துடன் இரண்டு தம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டுக் காய்ச்ச வேண்டும். காய்ச்சும் போது ஒரு பிடி உளுத்தம் பருப்பை அதில் போட்டுக் கிளறி ஒரு கொதி அந்தவுடன் இறக்கி, வடிகட்டி, வெது வெதுப்பான நீரினை ஒரு பாலாடை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை வீதம் மூன்று நாள்கள் கொடுக்க வேண்டும். மார்புச் சளி விரைந்து குணமாகும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல், பக்கம் 204)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)
அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, கடகம் (ஆடி )19]
{04-08-2021}
==========================================================