மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

முகம் - பொலிவு பெற (To get Shining Face)

 

01.   அவரை இலைச் சாறை காலையில் எழுந்ததும் முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் முகம் பளபளக்கும். (845)

 

02.   அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து, பின் வெல்லம் சேர்த்துப் பருகி வந்தால், முகம் அழகு பெறும். பளபளக்கும்.(1178)

 

03.   ஆவாரம் பூ, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துப் பொடியாக்கி, குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக இப்பொடியை முகத்துக்கும், உடலுக்கும் பயன்படுத்தி வந்தால் முகமும் உடலும் மினுமினுக்கும்.(842)

 

04.   இரவு புல்லின் மீது துணியை விரித்து வைத்து, காலையில் பனியால் நனைந்திருக்கும் அத் துணியால் முகத்தைத் துடைத்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.(839)

 

05.   எலுமிச்சைச் சாறு பிழிந்து கொதிக்கும் வெந்நீரில் விட்டு, ஆவி பிடித்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும். (821)

 

06.   கசகசாவை எருமைத் தயிர் விட்டு அரைத்து, தினந்தோறும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் முகத்தில் பூசி, காலையில் முகம் கழுவி வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.(829)

 

07.   குங்குமப்பூ தைலம் சில சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பாஅன நீரில் கழுவினால்,இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் பொலிவு கூடும்.

 

08.   குங்குமப்பூவைப் பொடித்து பால் கலந்து குழைத்து முகத்தில் பூசி வந்தால், முகத்தின் கருமை நிறம் மாறி பொலிவுடன் திகழும்.

 

09.   கொள்ளினை நீரில் இட்டு இரவில் ஊறவைக்க வேண்டும்.காலையில் அதை எடுத்து மசித்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தால் முகம் பொலிவு பெறும்.

 

10.   துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டுக் குளித்து வந்தால் முகம் பளபளக்கும். (849)

 

11.   நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் எண்ணெய் விட்டுப் பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.(831)

 

12.   பப்பாளிப் பழக் கூழ் 50 கிராம், அறுகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு, கலந்து தினசரி முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளக்கும்.(843)

 

13.   பப்பாளிப் பழத்தை மசித்து, முகம், கழுத்து, கைகளில் தடவி  அரை மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால், முகம் வசீகரமாக இருக்கும்.(833)

 

14.      மாதுளம் பழச் சாறு ஒரு தேக்கரண்டி, அரைத் தேக்கரண்டி சந்தனம் கலந்து முகத்தில் பூசி, கால் மணி நேரம் கழித்து கழுவினால் முகப் பள பளப்பு கூடும்.

 

15.   மூக்கிரட்டை இலையைத் தொடர்ந்து உணவுடன் சேர்த்து வந்தால் முகம் பளபளப்பு அடையும் (824)

=====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================