01. .ஆவாரம் பூவைக் காய வைத்து, சிகைக்காய், சிறு பயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, கூந்தல் நீளமாக வளரும். பொலிவும் கூடும்.
02. ஆவாரம் பூ (புதிய பூ) 100 கிராம் எடுத்து அரைத்து, அடுப்பில் வைத்து, நீர்ப்பதம் போகும் வரைக் காய்ச்சி, கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து சீசாவில் வைத்துக் கொண்டு, தினமும் கொஞ்சம் எடுத்து தலையில் நன்றாகத் தடவி வாருங்கள். முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.
03. ஆவாரம்பூ சிறிதளவு, (புதிய பூ) மற்றும், செம்பருத்திப் பூக்களை எடுத்து, தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து, குளித்து வந்தால், உடல் குளிர்ச்சியாகும். முடி கொட்டுவது நின்று, கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும்.
04. குன்றிமணி விதையைத்
தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ
சேர்த்து அரைத்து, அடிபட்ட வீக்கம், வலி, கீல்வாயு, பக்கவலி, முடியுதிரல் முதலியவைகளுக்குத்
தரலாம்.
05. குன்றிமணியும் வெந்தயமும் எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, 7 நாட்களுக்குப் பின் எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.(927)
06. கொய்யா இலையைக் கொதிக்க வைத்து, குளிர்ந்த பிறகு தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று, பலம் பெறும்.
07. கோபுரம் தாங்கிச் செடியின் இலைகளை எடுத்துச் சாறு பிழிந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் தலை முடி உதிராது.(!718)
08. நீர்பிரம்மிச் சாற்றுடன் தேங்காயெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் நீங்கும்.
09. நெல்லி முள்ளியை [காய்ந்த காயை] அரைத்துப் பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். கருமையாகவும் வளரும்.(910)
10. வெந்தயம், குன்றிமணி ஆகியவற்றைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பின் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.(927)
11. வெள்ளரிக் காயை விதையுடன் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து தினமும் அருந்தி வந்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம். முடி வளர்ச்சி பெருகும்.
12. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலை முழுகி வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.(915)
=====================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள்
எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)19]
{04-08-2021}
==========================================================