மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

மூட்டு - வலி (Arthritis)

01.   அதிமதுரம் தூளுடன் நந்தியாவட்டைத் தண்டுப்பட்டைத் தூளும் கலந்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி தீரும்.

 

02.   அத்திப் பாலை எடுத்து மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போட்டு வந்தால்  விரைவில் வலி தீரும்.(309) (1150)

 

03.   இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி எடுத்து, இரு தேக்கரண்டி தேன் விட்டுக் குழைத்து தினமும் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மூட்டு வலியும் தீரும். (Harish)

 

04.   உடலில் இருந்து யூரிக் அமிலத்தை (Uric Acid) வெளியேற்றும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. ஆதலால் மூட்டு வலி, மற்றும் மூட்டு வீக்கத்தைக் குணப்படுத்தும்

 

05.   உத்தாமணி இலை, நொச்சி இலை இரண்டையும் சேர்த்து வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவை தீரும்., (1442)

 

06.   உருளைக் கிழங்கு உணவானது, முட்டி வலி, மூட்டு வாதம், மலச்  சிக்கல் உள்ளவர்களுக்கு ஆகாது. இத்தகையவர்கள் உருளைக் கிழங்கைத் தவிர்க்க வேண்டும்.(2016)

 

07.   ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வந்தால் அகண்ட வாயு குணமாகும்.(202) வாதவலி, மூட்டு வலி தீரும். (1738)

 

08.   எருமைத் தக்காளிக் காயையும் இலைகளையும் சேர்த்து மஞ்சள் சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து பற்றுப்போட்டு வந்தால் மூட்டு வலி நீங்கும். கட்டிகள் கரையும். புண்கள் ஆறும்

 

09.   ஏலக்காய், கிராம்பு, சுக்கு ஆகியவற்றை எடுத்து சிறிது நீர் தெளித்து அரைத்து சூடாக்கி, கை, கால் மூட்டுகள் மீது தடவி வந்தால் மூட்டு வலி தீரும்.

 

10.   ஓம எண்ணெயை சிறிதளவு எடுத்து  மூட்டுவலி, மார்ச்சளி, ஒற்றைத்  தலைவலி உள்ள இடங்களில் தடவலாம்

 

11.   கடுகு எண்ணெயில் வெங்காயச் சாறினைக் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாதவலி, மூட்டு வலி ஆகியவை தீரும்.(310)

 

12.   கணைப் பூண்டு இலையை வேப்ப எண்ணெய் விட்டு வதக்கிக் கட்டி வந்தால் மூட்டு வலி குணமாகும்.(1153)

 

13.   கண்ட திப்பிலியைப் ஐந்து கிராம் எடுத்து பொடித்து, சிறிதளவு  பாலில் கலந்து குடித்து வந்தால், உடல் வலி, முதுகு வலி, மூட்டு வலி, வாத நோய் குறையும்.

 

14.   கண்டங்கத்தரி இலைச் சாறு, வாதநாராயணன் இலைச் சாறு, முடக்கத்தான் இலைச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி எடுத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பிறகு 50 கிராம் பச்சைக் கற்பூரம்பொடி செய்து சேர்த்து சூடு செய்துகால் மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி கட்டுப்படும்.

 

15.   கருங்காலிப் பட்டை, அமுக்கரா, ஓமம், சுக்கு, முடக்கத்தான், பூனைக் காலி விதை, வாதநாராயணன் வேர் தலா 100 கிராம்  எடுத்து, பொடித்து , காலை மாலை 2 கிராம் வீதம் சாப்பிடலாம். நாள்பட்ட மூட்டு வலி, வீக்கம், தேய்மானம் விலகும்.

 

16.   கோதுமையைப் பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மூட்டு வலி  குணமாகும்.(319)

 

17.   கோரைக் கிழங்குப் பொடி ஒரு கிராம் எடுத்து தினமும் இருவேளை பாலில் கலந்து பருகி வரலாம். உடல் பருமனாகும். மூட்டுவலி தசை வலி குறையும்

 

18.   சரக்கொன்றை மர விதையை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி, மூட்டுப் பிடிப்பு ஆகியவை குணமாகும்.(311) (1896)

 

19.   சிறு குறிஞ்சான் இலைப் பொடியை மட்டும் 500 மி.கி வீதம் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

 

20.   சீந்தில் இலைகளை அரைத்து, சிறிதளவு உளுந்து மாவு கலந்து மூட்டுகளில் போடுங்கள். தசைகள் இறுகும். வலி நீங்கும்

 

21.   சீந்தில் இலைகளை வதக்கி, அரைத்து மூட்டுவலி,  உடல்வலி  உள்ள இடங்களில் பற்றுப் போடலாம்.

 

22.   சீந்தில் கொடி, தழுதாழை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தினமும் காலை மாலை இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வாத நோய் ஓடும்

 

23.   சுக்கு, பெருங்காயத்துடன், பால் சேர்த்து அரைத்து இடுப்பு வலி, தலைவலி, மூட்டு வலிகளுக்குப் பற்றுப் போடலாம்.

 

24.   சுக்குத் தூள் 5 கிராம், விளக்கெண்னெய் 5 மி.லி கலந்து கொதிக்க வைத்து தொடர்ந்து 48 நாட்கள் இரவில் உட்கொண்டு வந்தால், மூட்டு வலி, மூட்டு வீக்கம் விலகும்.

 

25.   தர்பூசணி விதைகளைப் பொடித்து ஒன்று முதல் மூன்று கிராம் அளவு உட்கொண்டால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குணமாகும்.

 

26.   தழுதாழை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒற்றடம் கொடுத்து வர சுளுக்கு, கீல் பிடிப்பு, மூட்டு வலிகள் தீரும்.

 

27.   நொச்சி இலைச் சாறில் ஒரு தேக்கரண்டி எடுத்து  ஒரு கிராம் மிளகுத்தூள், மற்றும் சிறிது நெய் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் ஆகியவை குணமாகும் .மருந்து சாப்பிடுகையில் உணவுக் கட்டுப் பாடு அவசியம். (1441)

 

28.   நொச்சிச் சாறினை மூட்டு வலி ஏற்படுகையில் வலி ஏற்படும் இடத்தில்  பூசி வர வேண்டும். சில நாட்களில் குணம் தெரியும்.(303)

 

29.   நொச்சி இலைச் சாற்றினை மூட்டு வலி, சதை வீக்கம், நரம்பு பிசகு ஆகியவற்றுக்குப் பூசி வரலாம்.  (303) (1770) (2014)

 

30.   நொச்சி இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி தீரும்.  (1442)

 

31.   பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறினைக் கலந்து தடவி வந்தால் மூட்டு வலி தீரும்.(313)

 

32.   பவளமல்லி இலைகள் நான்கு அல்லது ஐந்து எடுத்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தினமும் இரண்டு வேளை 50 அல்லது 60 மி.லி வீதம் அருந்தி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.

 

33.   பிரமிப் பூண்டை விழுதாக அரைத்து 50 முதல் 100 கிராம் எடுத்து 100 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, மூட்டில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.

 

34.   புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை நிழலில் உலர்த்தி அரைத்துச் சூரணம் (பொடி) செய்து தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம், மேகம் ஆகியவை குணமாகும்.

 

35.   மணித் தக்காளிக் கீரையை வதக்கி, மூட்டுப் பகுதியில் பற்றுப் போட்டு, ஒற்றடம் கொடுத்தால், வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

 

36.   முருங்கை இலையில் கால்சியம் சத்து இருப்பதால், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

 

37.   .முருங்கைக் கீரையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்நிவாரணம் கிடைக்கும்.  (1569)  வாத வலி  தீரும்.  (1739)

 

38.   மூட்டு வலிமுடக்கு வாதம்:- இந்த நோய்களால் நடக்க முடியாமல் சிரமப் படுபவர்கள் தினமும் காலைஇரவு நேரத்தில் ஒரு தம்ளர் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், சின்ன தேக்கரண்டி இலவங்கப் பொடியைக் கலந்து குடித்து வந்தால் ஒரே வாரத்தில் வலி குறையும். தொடர்ந்து எடுத்துக் கொண்டால், எவ்வளவு கடுமையான பாதிப்பாக இருந்தாலும் சரியாகும்.

 

39.      விழுதிக் கீரையை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் மூட்டுவலி      கட்டுப்படும்.    

 

40.   வெங்காயச் சாறினைக் கடுகு எண்ணெயில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாத வலி, மூட்டு வலி குணமாகும்.(310)

 

41.   வெந்தயம் 5 கிராம் எடுத்து தண்ணீரில் ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்

 

42.   வெந்நீர் நிரம்பிய தொட்டியில், பொறுக்கும் சூட்டில், தொப்புள் வரை அமிழ்ந்து இருக்கும் வகையில்அமர வேண்டும். இவ்வாறு அரை மணி நேரம் அமர்ந்து இருந்தால் மூலச்சூடு நீங்கும். வாத வலி, முழங்கால் வலி ஆகியவையும் தீரும்.(393)

 

43.   வெள்ளரிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் குறையும்.

 

44.   வேப்ப எண்ணெயில் கணைப் பூண்டு இலையை வதக்கிக் கட்டி வந்தால், மூட்டு வலி குணமாகும்.  (1153)

 =====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு  தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )20]

{05-08-2021}

==========================================================