01. ஆடாதோடை மணப்பாகு
வெந்நீரில் 5 மி.லி. கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர நீர்க் கோவை (Cold) தீரும்.
02. இஞ்சிச் சாறும் துளசிச் சாறும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து வேளைக்கு 25 மி.லி
வீதம் சாப்பிட்டால் நீர்க் கோவை (ஜலதோஷம்) நீங்கும். (108)
03. ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் சுறுசுறுப்பு ஏற்படும். ஓமத்தைப் பொடித்து தலையில் தேய்த்தால் நீர்க் கோவை குறையும்.
04. ஓமத்தைப் பொடித்து தலையில் தேய்த்தால் நீர்க் கோவை குறையும்.
05.
கடுகு, திப்பிலி, கடுகுரோகிணி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து அகியவற்றை எடுத்து அரைத்து நிழலில் உலர்த்தி சிறு மாத்திரைகளாக்கி காலை மாலை ஒவ்வொன்று வீதம் சாப்பிட்டு வந்தால் கடுமையான நீர்க்கோவை கூட தீரும்.(164)
06. கறிவேப்பிலைப் பொடியுடன் சிறுது சர்க்கரைப் பொடி கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை குணமாகும். வாய்வு இருந்தால் தீரும்.(324)
07. கோணிப் பை ஒன்றை இரவு படுக்கப் போகையில் எடுத்து தட்டிச் சுத்தமாக்கி, அந்தப் பைக்குள் கால்களை
விட்டு இடுப்பு வரை உயர்த்திய நிலையில் உறங்கினால், காலையில் பார்க்கையில் நீர்க்
கோவை போன இடம் தெரியாமல் போய்விடும்.
08. சந்தனத் தூள் 20 கிராம், 300 மி. லி நீரில் போட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி மூன்று வேளையாக 50 மி,லி குடிக்க நீர்க் கோவை தீரும்.
09. சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி நீர்க்கோவையை விலக்கும்.(190)
10. சிறு கீரை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால், நீர்க் கோவை வராது. வந்தாலும் குணமாகும்.(127)(991)
11. சிற்றரத்தைப் பொடி ஒரு கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை விலகும். சுரம், சளி, ஈளை, இருமல், தொண்டைப்புண், வாயு ஆகியவை இருந்தால் அவையும் விலகும்.(120)
12. சுக்கு ஒரு துண்டு
எடுத்து தோல் நீக்கி கால் லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை
மாலை சாப்பிட்டு வர நீர்க் கோவை தீரும்.
13. சுக்கு, மிளகு, சீரகம் சேர்த்து எண்ணெயில் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், நீர்க்கோவை விலகும்.
14. திப்பிலி, கடுகு, ரோகினி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து சிறு மாத்திரைகளாக்கி காலை மாலை ஒன்று சாப்பிட்டு வந்தால் கடுமையான நீர்க்கோவை கூட சரியாகும். (164)
15. திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கை சம அளவாக எடுத்து, வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிடுங்கள். நீர்க்கோவை, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சீராகும்.
16.
தும்பைப் பூவின் சாற்றை தொடர்ந்து இரு வேளை வீதம்
இரண்டு நாள் கொடுத்தால் நீர்க் கோவை நீங்கும்.
17. துளசிச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவை சம அளவு எடுத்து, கலந்து குடித்து வந்தால் நீர்க் கோவை நீங்கும்.(108) (159)
18. தூதுவேளை இலைகளைப் பறித்து வந்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் நீர்க்கோவை விலகும்.(27)
19. தூதுவேளைச் சமூலம் எடுத்து சுத்தம் செய்து இரசம் வைத்து, மதியம் சோற்றில் பிசைந்து உண்டு வந்தால் ஜலதோஷம்
குணமாகும். (1127) (1782)
20. நல்லெண்ணெயில் பத்து
கருஞ்செம்பைப் பூவும் சிறிது கஸ்தூரி மஞ்சளும் சாம்பிராணியும் சேர்த்துக் காய்ச்சி, இளஞ்சூட்டில் தலையில்
வைத்து அரை மணி நேரம் கழித்துக் குளிக்க (வாரத்திற்கு 2 முறை மட்டும்) நீர்க்
கோவை தீரும்.
21. நல்வேளைச் சமூலம்
இடித்துப் பிழிந்துவிட்டு சக்கையை மட்டும் தலையில் வைத்துக் கட்டி போதுமான நேரம்
கழித்து எடுத்துவிட்டால் நீர்க் கோவை தீரும்.
22. நல்வேளைப் பூச்சாறு 10 துளித் தாய்ப்பாலில்
கலந்து பிறந்த குழந்தைகளுக்குக் கொடுத்தால் நீர்க் கோவை
தீரும்.
23. நிலவேம்பு 10 கிராம் எடை, கிச்சிலித் தோல் 150 கிராம், கொத்தமல்லி 150 கிராம் இவைகளை
வெந்நீரில் சேர்த்து மூடிவைத்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வடிக்கட்டி 30 மி,லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுக்கலாம். நீர்க்கோவை தீரும்.
24. நிலவேம்பு இலைக்
கருக்கு (கஷாயம்) சிக்கன்குனியா, டெங்கு போன்ற சுரங்களுக்கு
மிகச் சிறந்தது. வாதசுரம், நீர்க்கோவை, மயக்கம், பல்வகையான சுரங்களும்
நிலவேம்புக் கருக்கு குடித்து வரக் குணமாகும்.
25. நீர் முள்ளி வேரை 10 பங்கு கொதிநீரில்
போட்டு 24 மணி நேரம் ஊற
வைத்துத் தெளிவு நீரை 2 மணி நேரத்திற்கு ஒரு
முறை 30 மி.லி கொடுத்துவர நீர்க் கோவை தீரும்.
26. நொச்சி இலைச் சாறுடன்
சிறிது சாம்பிராணியும், சிறிது கடுகும்
சேர்த்து சிதைத்து, கரண்டியில் வைத்து
கொதி நிலை வரைச் சூடேற்றி, சற்று ஆறவிட்டு, இளஞ்சூட்டில் நெற்றியிலும், நெற்றிப் பொட்டிலுமாகப்
பற்றுப் போட்டுக் கொண்டு உறங்கினால், காலையில் நீர்கோவை குணமாகி
இருப்பதைக் காணலாம்.
27. புழுங்கல் அரிசி 2 லிட்டர் எடுத்து மெல்லிய
வெள்ளைத் துணியில் வைத்துத் தலையணை போல் கட்டி ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாயின், தலைக்கு வைத்துக் கொண்டு
உறங்கினால் காலையில் நீர்க் கோவை விலகிப்
போயிருப்பதைக் காணலாம்.
28.
மணித்தக்காளி வற்றல் 100 கிராம் கொதிக்கிற 500 மி.லி. வெந்நீரில் சேர்த்து, ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து,வடிக்கட்டி 50 மி.லி அளவு கொடுத்தால் நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு ஆகியவை தீரும்.
29. மஞ்சளை சுட்டு புகையை மூக்கில் நுகர்ந்தால் நீர்க்கோவை விலகும். (1282)
30.
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் நீர்க்கோவை விலகிவிடும் (1120)
31.
மிளகுப் பொடி ஒரு சிட்டிகையும், மஞ்சள்பொடி ஒரு சிட்டிகையும் பாலில் கலந்து காய்ச்சி இரவில் ஒரு வேளை
அருந்தி வர சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நல்ல
பலன் தரும்.
32. முருங்கைப் பிஞ்சுகளை நசுக்கிச் சாறு எடுத்து, அந்த சாறுடன் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் நீர்க்கோவை விலகிவிடும்.(149)
33. முள்ளங்கிச் சாறு சாப்பிட்டு வந்தால் நீர்க் கோவை நீங்கும். இருமல், தலைவலி ஆகிவை இருந்தால் அவையும் நீங்கும்.(111)
34. விரளி மஞ்சளைச்
சுட்டுப் புகையை உள்ளுக்கு இழுத்தால் நீர்க் கோவை
தீரும்.
35. வில்வ இலைச் சூரணம் அரைத் தேக்கரண்டி தேனில்
குழைத்து காலை மாலை கொடுத்துவர நீர்க் கோவை தீரும்.
36. வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். (1585) நீர்க் கோவை தீரும். (1733)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)20]
{05-08-2021}