01. அன்னாசிப் பழம் தினசரி இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(706)
02. அன்னாசிப் பழம் தொடர்ந்து சில நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழிந்துவிடும்.(706)
03. இலவங்கப் பட்டையை வார இருமுறை உணவுடன் பயன் படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(796)
04. இலவங்கப் பட்டையை வாரத்தில் இரண்டு நாள் உணவில் பயன்படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். தாது விருத்தியாகும்.(796)
05. ஓமம் சிறிதளவு எடுத்து வெல்லம் சேர்த்து தின்றால் வயிற்றுப் பூச்சி அழியும்.
06. கல்யாண முருங்கை இலைச் சாறு 50 மி.லி. தேன்
20 மி.லி. கலந்து
சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.
07. குப்பைமேனி இலைகள் ஒரு கைப்பிடி, பூண்டுப்பல் 4 ஆகியவை எடுத்து
அரைத்து சாறு எடுத்து 15 மி.லி
குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். (688)
08. சுண்டைக் காய் சிறிதளவு, கறிவேப்பிலை, மிளகு போட்டு,கசாயம் வைத்து
சிறு குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்.
09. துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீரில் அரைத் தம்ளர் எடுத்து அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(724)
10. தேன் ஐந்து கிராம் எடுத்து அதில் மூன்று துளி எருக்கு இலையின் சாறினை விட்டுக்
கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கும். கீரிப்பூச்சி, கொக்கிப் புழு ஆகியவை வெளியேறும்.
11. பப்பாளிப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். (1412)
12. பாகல் இலையை சாறு பிழிந்து 30 மி.லி உட்கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(725) (732)
13. பாகற் கொடி இலைகளை எடுத்து சாறு பிழிந்து 20 மி.லி உட்கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(725) (732) (1372)
14. பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(660)
15. பூண்டு, குப்பை மேனி அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப்பூச்சி ஒழிந்து குணம் பெறலம்.688)
16. மாதுளம் செடியின் வேரினைச் சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி, அந்த நீரைப் பருகி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.(691)
17. மாம்பருப்பைப் பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை கொடுத்தால், குடல் பூச்சி அகலும்.
(655)
18. வசம்பைச் சுட்டுக் கரியாக்கிப் பொடி செய்து தேனில் குழைத்து குழந்தகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். (345) (647) (705)
19. வாய்விளங்காப் பொடியை வேளைக்கு ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து மூன்று வேளை கொடுத்து ,மறு நாள் ஆலிவ் எண்ணெய் குடிக்கக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும் (672)
20. வெள்ளைப் பூண்டுப் பற்கள் ஐந்து எடுத்து ஒரு கைப்பிடி குப்பை மேனியுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சி ஒழியும்.(688)
21. வேப்பம் பூவை உப்புப் போட்ட மோரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி, பொடி செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும்.(699)
22. வேப்பிலையை நன்றாக அரைத்துச் சாறு எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகளின் தொந்தரவு நீங்கும்.(681)
=====================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள்,வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,
கடகம்
(ஆடி
)21]
{06-08-2021}
==========================================================