மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வயிறு - வயிற்றுப் போக்கு (Loose Motion)

 

01.   ஏலக்காயைப் பொடித்து, தேனில் குழைத்து உட்கொண்டால், நரம்பு பலமடையும். வயிற்றுப் போக்கு நிற்கும்.

 

02.   ஓமம் சிறிது எடுத்து இரண்டு வெற்றிலை அதனுடன் சேர்த்து மைய அரைத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.(667)

 

03.   கடுக்காய்த் தூளை அரைத் தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தி வந்தால், வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

 

04.   கறிவேப்பிலைச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் வயிற்றுப் போக்கு நிற்கும்

 

05.   கார்போகரிசி இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும்  வல்லது.

 

06.   கோரைக் கிழங்கை அரைத்து காய்ச்சிய பால் சேர்த்து அருந்தினல், பசியின்மை அகலும்; வயிற்றுப் போக்குக் கட்டுப்படும்

 

07.   சீரகத்துடன் சிறிதளவு ஓமம் போட்டுக் கசாயம் வைத்துக் குடித்தால், வயிற்றுப் போக்கு நிற்கும்.

 

08.   சீரகம் 5 கிராம், கறிவேப்பிலை 15 கிராம் எடுத்து அரைத்து, உள்ளுக்குச் சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், வயிற்றுப் போக்கு குணமாகும்.

 

09.   சுக்கை பத்து கிராம் எடுத்து அரைத்து, புளித்த மோரில் கலந்து,மூன்று நாட்கள் மூன்று வேளை வீதம் உட்கொண்டு வந்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

 

10.   சுண்டை வற்றலை உப்பு கலந்த மோரில் ஊற வைத்து, காய வைத்து, எண்னெயில் வறுத்து இரவு மட்டும் உணவுடன் உண்டு வந்தால், வயிற்றுப் போக்கு தீரும்.(128)

 

11.   சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்து, காய வைத்து, எண்ணெயில் வறுத்து, இரவு உணவில் பயன்படுத்தி வர, மார்புச்சளி, ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு நின்று விடும்.

 

12.   சுண்டைக்காய் வற்றல், ஓமம், கசகசா, சுக்கு, காய்ந்த கறிவேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து தனித் தனியே நெய்யில் வறுத்து, ஒன்றாகச் சேர்த்து, பொடித்து, வேளைக்கு அரைத் தேக்கரண்டி வீதம் காலை மாலையில் வெந்நீரில் அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

 

13.   நல்லெண்ணையில் சுண்டை வற்றலை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு கரண்டி சுடு சோற்றில் 2 உருண்டை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும்.(658)

 

14.   நீர்முள்ளி விதையைப் பொடி செய்து ஒரு கிராம் பாலில் கலந்து  சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.(680)

 

15.   பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் தொடர் வயிற்றுப் போக்கு குணமாகும்.(704)

 

16.   மாசிக்காய் மூன்று, நெல்லிக்காய் ஆறு, எடுத்துக் காயவைத்துப் பொடித்து காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால், வயிற்றுப் போக்கு குறையும்.

 

17.   வெந்தயம் 10 கிராம் எடுத்து சிறிது நெய் விட்டு வறுத்து, அரைத் தேக்கரண்டி சோம்பு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தினால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.

 

18.   வெந்தயம் 10 கிராம் எடுத்து சிறிது நெய் விட்டு வறுத்து, அரைத் தேக்கரண்டி சோம்பு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தினால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்

 

19.   வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால்  வயிற்றுப் போக்கு நிற்கும்.. (667)

=========================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவஅதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்  2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (ஆடி )21]

{06-08-2021}

==========================================================