மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வயிறு - பொருமல் (Stomach Disorder)

 

01.   ஏலக்காய்ப் பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, அஜீரணம் ஆகியவை குணமாகும்.(671)

 

02.   ஓமத்துடன் வெற்றிலை சேர்த்து இடித்துப் பிழிந்து தேன் கலந்து பருகினால் வயிற்றுப் பொருமல் குணமாகும்.(641)

 

03.   சீரகம் சிறிதளவு எடுத்து வெற்றிலை 2 , நல்ல மிளகு 4 , சேர்த்து மென்று, ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் சீராகும்.

 

04.   சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து, பொடித்து, உணவுடன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் கைகால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல், மூலக் கடுப்பு, மூல நோயால் உண்டாகும் இரத்தக் கசிவு ஆகியவை சீராகும்.

 

05.      திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கை சம அளவாக எடுத்து, வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிடுங்கள். நீர்க்கோவை, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சீராகும்.

 

06.   நிலவேம்பு இலைச் சாற்றைக் குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் பொருமலுக்கும், கழிச்சல்கட்கும் தரலாம்

 

07.   நெல்லிகாய் லேகியம் காலை மாலை சிறிதளவு  சுவைத்து, பால் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பொருமல், ஏப்பம் ஆகியவை குணமாகும்.(729)

 

08.   பெருங்காயத்தை அரை கிராம் எடுத்து பொரித்து வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி குணமாகும்.(734)

 

09.   வெற்றிலை, ஓமம் இரண்டையும் எடுத்து இடித்துப் பிழிந்து தேன் சேர்த்து பருகினால்  வயிற்றுப் பொருமல்  குணமாகும் (641)

 

10.   வெற்றிலையைச் சூடு படுத்தி குழந்தையின் வயிற்றின் மீது போட்டு வைத்தால் பொருமல் வலி குணமாகும்.(654)

=========================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவஅதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்  2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================