மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாதம் - வாதக் குடைச்சல் (Rheumatic Pain)

 

01.   உத்தாமணி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒற்றடம் கொடுக்க, கீல் வாதம் (மூட்டு வலி),முடக்கு வாதம், வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.

 

02.   பிண்ணாக்குக் கீரையை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதக் குடைச்சல் தீரும். (1114)

 

03.   வாதமடக்கி இலையைச் சமைத்துண்ண வாத நீர் கழியும். வாரம் 2 அல்லது 3 முறைப் பயன்படுத்தலாம். வாத வலி,  வீக்கம்,  குத்தல் குடைச்சல் தீரும்.

 

04.   வாதநாராயணன் இலைச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி. ) குடித்து வந்தால் வாத வீக்கம், வாதக் குடைச்சல் ஆகியவை தீரும்.  (1625)

 ====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================