மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 செப்டம்பர், 2021

வாதம் - பக்க வாதம் (Paralysis)

 

01.   மிளகாய்ப் பூண்டு விதையில் எண்ணெய் தயாரித்து, இரு துளிகளைச் சர்க்கரையில் விட்டு காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க வாதம் குணமாகும்.(1108)

 

02.   முருங்கை மரப் பட்டையை நீரிலிட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டு வரக் குளிர் காய்ச்சல், பாரிச வாயு, (பக்கவாதம்) காக்கை வலிப்பு, சூதக சன்னி ஆகியவை தீரும்

 

03.   வெங்காயத்தை  (பச்சையாக) சாறு பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பல் துலக்கிய பின்,, வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பக்க வாதம் குணமாகும்.(1105)


04.   நன்னாரி வேர் 20 கிராம் எடுத்து நீர்  விட்டு சுண்டக் காய்ச்சி, வடிகட்டிச் சாப்பிட்டு வந்தால் பாரிச வாதம் குணமாகும்.(1113)

 

 

05.   மிளகாய்ப் பூண்டு வேர் 40 கிராம் எடுத்து 250 மி.லி நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சி தினம் 2 வேளைக் குடித்து வர வாத வீக்கம்,வாத நோய், பாரிச வாதம் தீரும்.

 

 

====================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01).அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம்  B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்   ஸ்ரீ சேஷா சாய்  ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவஅதிகாரி,  டாக்டர்.  வெ .ஹரிஷ்   அன்புச் செல்வன்  M.D(s),  அவர்கள்   2017 –ஆம்  ஆண்டு    தினமலர்,   பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்,  நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]

{01-09-2021}

==========================================================