01. சப்பாத்திக் கள்ளியை எடுத்து, அதிலுள்ள முள்ளினை நீக்கிவிட்டு, விளக்கெண்னெயில் வாட்டி, முடக்கு வாதத்திற்கு வைத்துக் கட்டி வந்தால், முடக்குவாதம் மட்டுப்படும். ஒற்றடமும் கொடுக்கலாம். (1112) (1371)
02. பவள மல்லி இலையைக் கசாயமாகாவோ அல்லது பொடியாகவோ செய்து சாப்பிட்டால் முடக்கு வாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் காய்ச்சல் குறையும்
03. உத்தாமணி இலையை
வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் குடைச்சல்
தீரும்.
04. உத்தாமணி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒற்றடம் கொடுக்க, கீல் வாதம் (மூட்டு வலி), முடக்கு வாதம், வாதக் குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும்.
05. சப்பாத்திக் கள்ளியை முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி (விளக்கெண்ணை தடவி அனலில் காட்டி வாட்டி) முடக்கு வாதத்துக்கு வைத்துக் கட்டி வந்தால் முடக்கு வாதம் கட்டுப்படும். ஒற்றடமும் கொடுக்கலாம்.(1112)
06. தேன் 2 தேக்கரண்டி எடுத்து, ஒரு சின்ன தேக்கரண்டி இலவங்கப் பொடியை அதில் சேர்த்து இவ்விரண்டையும் ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் மூட்டு வலி , முடக்கு வாதம், நோய்களால் நடக்க முடியாமல் சிரமப் படுபவர்கள் ஒரே வாரத்தில் வலி குறைந்து முன்னேற்றம் காண்பார்கள். தொடர்ந்து எடுத்துக் கொண்டால், எவ்வளவு கடுமையான பாதிப்பாக இருந்தாலும் சரியாகும்.
07. பவள மல்லி இலையைக் கசாயமாகாவோ அல்லது பொடியாகவோ செய்து சாப்பிட்டால் முடக்கு வாதத்தினால் ஏற்படும் வலி மற்றும் காய்ச்சல் குறையும்.
08.
புன்னை விதையை
அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு,
வாதவலிகள் தீரும்.
09.
வாதமடக்கி (வாதநாராயணன்) தைலம் காலை மட்டும் 10 மி.லி சாப்பிட்டு வர
வாதரோகக் கீல் வாயு, முடக்கு வாதம், நடுக்கு வாதம் தீரும்.
10.
மாவிலங்க இலை 60 கிராம் எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சிக்
குடிநீராக்கி சமனளவு தேங்காய்ப் பால் கலந்து 100 மி.லி வீதம் 3 அல்லது 4 வேளை கொடுத்து வர முடக்கு வாதம் தீரும்.
11.
மாவிலங்க
இலைக் கசாயம் சம அளவு தேங்காய்ப் பால் சேர்த்து மூன்று வேளைகள் குடித்தால் முடக்கு வாதம் தீரும்.
(1565)
மருத்துவக் குறிப்புகளுக்கு
ஆதாரம்:-
(01).அடைப்புக்
குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ். ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து
வெளியிட்டுள்ள ”
2025 எளிய சித்த மருத்துவக்
குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.)அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ
அதிகாரி, டாக்டர். வெ .ஹரிஷ் அன்புச்
செல்வன் M.D(s), அவர்கள் 2017
–ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப்
பெற்றவை !
(03).அடைப்புக்
குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள
மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில்
எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப் பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு
செய்து எடுத்துக் கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, மடங்கல் (ஆவணி )16]
{01-09-2021}
==========================================================