மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 31 மே, 2021

கரப்பான் (மண்டைக் கரப்பான்) (Scall)

 

01.   சிவனார் வேம்புச் செடியைப் பிடுங்கி வந்து நிழலில் உலர்த்தி, பின்பு எரித்துச் சாம்பலாக்கி, அந்தச் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து தலை முழுவதும் தடவி  இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சில முறை இவ்வாறு செய்தால் மண்டைக் கரப்பான் குணமாகும். (1030)

 

02.   பொரித்த படிக்காரத்தை எடுத்து பப்பாளிப் பால் சேர்த்து மண்டைக் கரப்பான் மீது தடவி வந்தால், அவை விரைவில் நீங்கிவிடும்.  (1444)

 

03.   மிளகு ஐந்து, துவரம் பருப்பு ஐந்து, சுக்கு ஒரு அவரை விதை அளவு, புழுங்கல் அரிசி பத்து, உரித்த பூண்டுப் பல் இரண்டு ஆகியவற்றைக் கல்லில் வைத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும்.  துத்தி இலைகளை வாயில் போட்டு மென்று அத்துடன் பொடித்து வைத்த பொருள்களையும் வாயில் இட்டு மென்று கொழ கொழவென்று வரும் சாறினை இரு காதுகளிலும் வாயை வைத்து ஊத வேண்டும்.  இரண்டாம் நாளும் இவ்வாறே செய்ய வேண்டும். பிறகு ஒரு தம்ளர் தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் வெப்பாலை இலைகளை ( கிள்ளினால் பால் துளிர்க்கும் ) சம அளவு நறுக்கிப் போடவேண்டும். மறு நாள் முதல் இலை ஊறிய எண்ணெயைக் கோழி இறகினால் தொட்டு கரப்பான் புண் மேல் போட்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு இரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு தலையில் தாண்ணீர் ஊற்றக் கூடாது. ஆனால் மேலுக்குக் குளிக்கலாம்.  இந்த மருத்துவத்தால் மண்டைக் கரப்பான் குணமாகும். (ஆதாரம் : “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல் )

 

04.   பப்பாளிப் பாலை  படிக்காரத்துடன் கலந்து தடவி வந்தால் மண்டைக் கரப்பான்  சொறி குணமாகும்.  (1444)

  

=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )17]

{31-05-2021}

==========================================================