மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

கருப்பை - பெரும்பாடு. (Menorrhagia)

 

01.   அத்திப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு , மாதவிடாய் வலி ஆகியவை தீரும் (719)

 

02.   அரிசிமாவை ஆவியில் அவித்து, தேங்காய், கருப்பட்டி சேர்த்து உண்டு வர அதி உதிரப் போக்கு சமன்படும்.(553)

 

03.   கவிழ்தும்பை  இலையுடன் குருவை அரிசி சம அளவு இடித்து மாவாக்கி வெல்லம் கலந்து மூன்று வேளை சாப்பிடக் பெரும்படு நோயிலிருந்து குணம் பெறலாம்.(624)

 

04.   கழற்சிக்காய்ப் பொடி கால் தேக்கரண்டி, சிறிதளவு மிளகுப் பொடி இரண்டையும் மோரில் கலந்து  வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர்வும். பெண்களுக்கு மாத விலக்குப் பிரச்சினை கட்டுப்படும்; அதிக இரத்தப் போக்கு, வெள்ளைப் போக்கு, நீர்க்கட்டி அகலும்.

 

05.   சித்தகத்தி விதையை ஊற வைத்து அரைத்து ஐந்து கிராம் கொடுக்க, பெரும்பாடு, மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகும்.(616)

 

06.   செங்கீரைத் தண்டினைச் சமைத்து  உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு நோய் குணமடையும்.(806)

 

07.   செம்பருத்திப் பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்

 

08.   தென்னம்பூவை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து, நாயுருவிச் செடியை எடுத்துச் சுத்தம் செய்து, இரண்டையும் சேர்த்து மைபோல் அரைத்து, சாப்பிட்டு வர இரண்டு நாட்களில் பெரும்பாடு நோய் நீங்கும்.(601)

 

09.   பருத்தி இலைச் சாற்றினைப் பாலில் கலந்து சாப்பிட்டு வண்ட்தால் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு குணமாகும்.(593)

 

10.   மாசிக்காய்ப் பொடி, தேன் இரண்டையும் தலா அரைத் தேக்கரண்டி எடுத்து கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப் போக்கு, தீராத வயிற்று வலி ஆகியவை சீராகும்.

 

11.   வல்லாரை இலை, உத்தாமணி இலை இரண்டையும் நிழலில் காயவைத்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி வெந்நீரில் சாப்பிட்டால்  பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு வலி தீரும்.(585)

 

12.   வாழைப் பழத்துடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். (596)

13.   வாழைப் பூவுக்குத் தசையை உறுதிப் படுத்தும் தன்மை உள்ளதால், இது மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கைத் தடுக்கும்.

 

14.   விளா மரத்தின் பிசினைத் தொட்ர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும்.


=========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021}

==========================================================