மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

புண்கள் (Bruises)

 

01.   அருகம் புல் எடுத்து உரலில் இட்டு இடித்து சாறு பிழிந்து சீசாவில் ஊற்றி வைத்துக் கொண்டு நாள்தோறும் பஞ்சில் நனைத்து புண்ணின் மேல் தடவி வந்தால் புண் ஆறிவிடும். ( ஆதாரம் : “நாட்டு மருத்துவமணி நாகம்மாநூல் )

 

02.   இலுப்பைப் பூவைக் கசாயமாக்கி, அந்தக் கசாயத்தில் கால்களைக் கழுவி வந்தால், பெரியவர்களுக்கு, கால்களில் உள்ள புண்கள் ஆறும்.(451)

 

03.   ஊசிப் பாலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் தேன் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் குறியில் உள்ள புண் ஆறிவிடும். (488)

 

04.   ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி. தேங்காய் எண்ணெய் 500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம் போட்டு சுண்டக் காய்ச்சி சாறு வடிக்கவும் இதனை அனைத்து வகையானபுண்களுக்கும் மேல்பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆறாத குழிப்புண், வளர் புண் ஆகியவை குணமடையும்.

 

05.   கடுக்காயைக் கல்லில் உரசி பெண்களின் இடுப்புப் புண் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.(525)

 

06.   கருவேல மரத்தின் கொழுந்தினை மை போல் அரைத்துப் புண் மீது வைத்து கட்டி வந்தால்  புண் விரைந்து ஆறும்.(1004) (1033)

 

07.   கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம்,இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

 

08.   கொய்யா இலைகளை அரைத்து, புண், காயங்களின் மீது தடவினால், விரைவில் ஆறிவிடும்.

 

09.   கோரைக் கிழங்கை (பச்சைக் கிழங்கு) உடலில் ஏற்படும் புண்ணிற்கு அரைத்துப் பற்றிட்டால், புண் ஆறும்.

 

10.   சாணக் கீரை ஆறாத புண்களையும் ஆற்றும் வல்லமை உடையது. (460)

 

11.   சிலந்தி நாயகம் இலைகளே மருத்துவப் பயன்கள் உடையவை. இலையை அரைத்து நகச்சுற்று, புண், சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும்.

 

12.   சிறு தேட் கொடுக்கு  இலைச் சாறினைப் புண் மீது பிழிந்து விட்டு வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.(889)

 

13.   சீந்தில் இலையை அனலில் வாட்டிப் புண்களின் மீது போட்டு வர, புண்கள்  விரைவில் குணமாகும்.

 

14.   சீந்தில் இலையைத் தீயில் வாட்டி, இளஞ்சூட்டுடன் புண்களின் மேல் பற்றுப் போடலாம். புண்கள் விரைவில் ஆறும்.

 

15.   தான்றிக் காயை வெந்நீர் கொண்டு உரைத்து புண்களின் மீது போட்டு வந்தால் அவை ஆறும். (Harish)

 

16.   திரிபலா சூரணத்தை நீரில் இட்டுக் கலக்கி புண்களில் ஊற்றிக் கழுவலாம். புண்கள் ஆறும்.

 

17.   நந்தியாவட்டைச் செடியில் வரும் பாலை புண்களின் மீது வைத்து வர, அவை ஆறும்.

 

18.   நாய்வேளை இலைகள் பத்து கிராம் எடுத்து 100 மி.லி நெய்யில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி புண்கள் மீது பூசி வந்தால், புண்கள் குணமாகும்.

 

19.   நுணா இலையை அரைத்து புண்கள், சிரங்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவந்தால் விரைவில் குணமாகும்..

 

20.   நொச்சி இலையை அரிசிக் கஞ்சியுடன் அரைத்து புண்களுக்கு மருந்தாகப் போடலாம். இலை சாறினால் புண்ணைக் கழுவிய பின் இம்மருந்தைப் போட வேண்டும்.

 

21.      பிரமிய வழுக்கைச் செடியை அரைத்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் புண்கள் ஆறும்.  (1603)

 

22.   புளிய மரத்து சொற சொறப்புப் பட்டையை எடுத்து வந்து நசுக்கி பட்டுப் போல் பொடி செய்து  புண்களின் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வந்தால் ஆறாத புண் கூட ஒரு வாரத்தில் ஆறிவிடும். (447)

 

23.   புங்கை மர வேரை எடுத்து, துண்டு துண்டாக்கி, சிதைத்து, நீரில் இட்டுக் கசாயமாகி, காலை மலை அரை தம்ளர் குடித்து வந்தால் ஆண் குறியில் உள்ள புண்கள் குணமாகும்.  (490)

 

24.   புன்னைமரப் பட்டையை உரித்து வந்து  குடிநீர் செய்து புண்களைக் கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். (1485)

 

25.   மஞ்சள் தூளுடன் சிறிதளவு நல்லெண்ணெய், கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி புண்களின் மீது தடவி வந்தால் அவை விரைவில் ஆறும்.

 

26.   மருத மரத்தின்  பழத்தை நன்கு வேக வைத்து, பிசைந்து புண்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

 

27.   மாமரம் அல்லது வேப்ப மரத்தின் பட்டைகளைக் கொண்டுவந்து இடித்து இரண்டு கைப்பிடி எடுத்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரினால் (வெது வெதுப்பனது) புண்ணைக் கழுவிட வேண்டும். பின்பு தொட்டாற் சுருங்கி இலைகளை அரைத்துப் புண் மீது பூசி வந்தால் எப்படிப்பட்ட புண்ணும் ஆறிவிடும். (ஆதாரம்நாட்டு மருத்துவ மணி நாகம்மா”)

 

28.   ரோஜாப் பூவைக் கசாயம் வைத்து இரணங்களைக் கழுவி வந்தால் அவை ஆறி அந்த இடத்தில் சதை வளரும்.  (1614)

 

29.   வேப்ப எண்ணெயை  வீக்கத்தின் மீது தடவி, இலை நரம்பு எடுக்கப் பெற்ற  விராலி இலையை வதக்கி கட்டி வந்தால், சில நாட்களில் மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆறும். (452)

 

30.   வேப்பம் பழ வித்திலிருந்து பருப்பை எடுத்து அரைத்து புழுப்பட்ட புண்களுக்குக் கட்ட, புண்ணினின்றும் புழுக்கள் வெளிப்படும்.

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

==========================================================