01. அவலுடன் நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடற் சோர்வு நீங்கும். உடல் உறுதி பெறும்.(795)
02. கோதுமைக் கஞ்சி வைத்து மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட்டு வந்தால் அச்சமையங்களில் தோன்றும் உடல் அசதி மறையும்.((784)
03. சீரகம், சுக்கு, மிளகு, கொத்து மல்லி, சிற்றரத்தை ஆகியவற்றைச்
சம பங்கு எடுத்து, பொடித்து, வேளைக்கு
இரண்டு சிட்டிகை வீதம் தினமும் இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், உடலில் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
04. நொச்சி இலைகளைப் ஒரு பிடி வெந்நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரில்
குளித்தால் உடல் அசதி தீரும்.
05. மிளகை நெய்யில் வறுத்து, தூள் வெல்லம், நெய் சேர்த்துக் கிளறி ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு தீரும் (742)
06. முருங்கை ஈர்க்கு ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடல் அசதி, கை, கால் வலி தீரும்.(769)
07. வால்நட் மற்று லார்ச் மலர் மருந்து சப்பிட்டு வந்தால் அனைத்து நேரங்களிலும் சோம்பலாகவே உணரும் தன்மை விலகும் (518)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக