மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 மே, 2021

ஆனைக்கால் நோய் (Elephantiasis)

 

 

01.  கருங்கொள்ளு, காந்தக்கல், காவிக்கல், புற்றுமண், முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து அரைத்து, வீக்கம், கட்டி, யானைக்கால் நோய்க்குப் பற்றுப் போடலாம்.(Asan)

 

02.  காக்கரட்டான் விதை 10 பங்கு, இந்துப்பு 10 பங்கு சுக்குத்தூள் 2 பங்கு  எடுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி கொடுத்துவர யானைக்கால் நோய் குணமாகும்.

 

03.  காக்கிரட்டை ( சங்குப்பூ ) விதைத் தூள் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குத் தூள் 25 கிராம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு வேளைக்கு மூன்று கிராம் வீதம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆனைக் கால் நோய் குணமாகும். (1048)

 

04.  சத்திச் சாரணை வேர்ப் பொடி அரை கிராம் சாப்பிட்டு வந்தால் யானைக் கால் வீக்கம், வாதநோய் குணமாகும்(1720)

 

05.  தழுதாழை இலையை ஆலிவ் விதை எண்ணெயில் வதக்கிக்கட்ட யானைக்கால் வீக்கம், விரை வாதம், வாத வீக்கம், நெறிக் கட்டிகள் தீரும் (1101)

 

06.  பசுவின் சிறுநீரும், மஞ்சள் தூளும், வெல்லமும் கலந்து  தினசரி ஒரு வேளை மட்டும் 30 மி.லி. அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆனைக்கால் நோயிலிருந்து விடுபடலாம்.(1049)

 

07.  பப்பாளி இலையை அரைத்து யானைக் காய் நோய்க்குப் பற்றுப் போட்டு வந்தால், புண்கள் ஆறும். மிகுந்த பயன் உண்டு.  (1046) (1773)

 

08.     வல்லாரை இலைப் பொடி காலை மாலை நெய்யில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1578)

 

09.     வல்லாரைக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால் யானைக் கால் வீக்கம் குணமாகும்..  (1607)

 

10.     வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.  (1047) (1268)  (1880)



 

 ==========================================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை !

(02.  ) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ் அன புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )15]

{29-05-2021}

===========================================================


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக