01.
அவரி வேர் 20 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 3 கிராம் மையாய் அரைத்து கோலிக்குண்டு அளவு காலை மாலை சாப்பிட்டு, இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும். இம்மருந்தை நாள்தோறும் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிடப் பாம்பு, தேள், பூரான், செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும்.
02. ஈஸ்வரமூலி வேரை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி 30 மி.லி வீதம் 3 வேளையாகக் கொடுக்க உதிரச் சிக்கல் தீரும். பாம்புக்கடி, தேள் கடி விஷம் நீங்கக் கடிவாயில் இலையைக் கசக்கித் தேய்க்கலாம்.
03.
உப்பு நீர்க்கரைசலை எடுத்து
வடிகட்டி, உடலில்
வலப்பக்கம் தேள் கொட்டியிருந்தால் இடப்பக்க காதில் பத்து சொட்டுகள் விட
வேண்டும். பத்து
நிமிடங்களில் விஷம் இறங்கிவிடும். இறங்கவில்லை எனில். இரு
கண்களிலும் சில துளிகள் உப்பு நீரை விடவும். (ஆதாரம் : “ நாட்டு
மருத்துவமணி நாகம்மா “ நூல், பக்கம்
40
& 41)
04.
எலியாமணக்கின்
கொழுந்தை
சிறிதளவு எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து நன்கு கசக்கித் தேள் கொட்டியவரிடம் வாயிலிட்டு மென்று விழுங்கச் செய்தால், உடனடியாக நஞ்சு இறங்கும்.
05. எலுமிச்சம் பழத்தைத் தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் இறங்கும்.
06. எலுமிச்சை விதைகளுடன் சிறிது உப்பினைச் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதைத் தண்ணீரில் கலந்து குடித்தால் தேள்விஷம் இறங்கும்.(898)
07. கரிசலாங் கண்ணி இலையை அரைத்துக்
கொதிக்க வைத்து தேள் கடிக்கு, கடித்த இடத்தில் நன்றாகத்
தேய்த்து, அதையே அவ்விடத்தில்
வைத்துக் கட்டினால் நஞ்சு நீங்கும்
08.
கரிசலாங் கண்ணி இலையைத் தின்னவும். அதை அரைத்துக் தேள் கடிக்கு கடிவாயிலும் கட்டவும். தேள் விஷம் இறங்கும்.
09. சிலந்திநாயகம் இலைகள் ஐந்தாறு எடுத்து மென்று தின்ன, தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.(888)
10. திருநீற்றுப் பச்சிலைச்
சாற்றை தேள் கடித்த பின் உண்டாகும் வலிக்கு
கடிவாயின் மீது பூச வேண்டும்.
11. தும்பைச்சாறு 15 மி.லி தேனில் கலந்து கொடுத்துக் கொட்டு வாயில் இலையை அரைத்துக் கட்டினால் தேள் நஞ்சு இறங்கும்.
12. தும்பை இலைச் சாறு எடுத்து சிறிது
தேன் கலந்து கடிவாயில் பூசினால் தேள் கடி விஷம் இறங்கும். கடுப்பும் தீரும். (890)
13. தும்பை இலைச் சாறு எடுத்து 50 மி.லி உட்கொண்டால் தேள் கடி,
பாம்புக் கடி விஷம் முறியும். (900)
(1265)
14. தும்பை இலைச் சாறைத் தேனில் கலந்து கொடுத்தால் தேள் கடி விஷம் இறங்கும். (1401)
15. தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் தேள் விஷம் முறியும்.
16. தேள் கொடுக்குச் செடியின் இலைகள் தேள் கடி விஷத்தை நீக்க நாட்டுப்புற மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. தேள்
கடித்த தோல் பகுதியில் இதன் இலைச் சாறைப் பிழிந்து தடவுவது வழக்கமாக உள்ளது.
17. நாயுருவிச் செடியின் இலையைக் கசக்கித் தேய்த்தால், தேள் கடி விஷம் இறங்கும்.
18. நாயுருவி வேரை எடுத்து நீரில் அலசி சுத்தமாக்கி, வாயில் போட்டு மென்று சாறை விழுங்கினால் தேள் கடி விஷம் முறியும். (875)
19. நாயுருவிச்செடியை
வேருடன் பிடுங்கி வந்து நன்கு நீரில் கழுவி துண்டு துண்டாக வெட்டி வேரும் செடியும்
இரண்டறக் கலக்கும் வகையில் ஒன்றாகக் கலந்து கைப்பிடி அளவு எடுத்து வாயில் போட்டு
மென்று சாறினை உள்ளுக்குள் விழுங்கி வர வேண்டும். இவ்வாறு
செய்தால் தேள் விஷம் இறங்கிவிடும். (ஆதாரம்
: நாட்டு
மருத்துவமணி நாகம்மா” நூல்., பக்கம்
39)
20. நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை
அருந்த தேள் விடம் முறியும் .
21. பிரமதண்டு இலைச் சாறு (பால்) சில துளிகளை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் தேள் விஷம் முறிவடையும். (904)
22. புரச விதைகளை எடுத்து எருக்கம் பால் ஊற்றி மைய
அரைத்து கடிவாயில் பற்றுப் போடால் தேள் கடி விஷம் உடனே இறங்கும். (896)
23. புளியங்
கொட்டையை எடுத்து சூடேறும் வகையில் தரையில் தேய்த்து தேள்
கொட்டிய இடத்தில் சூட்டோடு வைத்தால் அது ஒட்டிக் கொள்ளும். விஷம்
இறங்கியவுடன் தான் அது கீழே விழும். (ஆதாரம்: “நாட்டு
மருத்துவமணி நாகம்மா “ நூல், பக்கம்
40))
24. முருங்கைக் கொழுந்து சிறிது பறித்து, அத்துடன் சிறிது உப்பு சேர்த்துக் க்சக்கி உள்ளுக்குக்
கொடுத்தால் தேள் கடி விஷம் விரைவில் இறங்கும்.
25.
வெங்காயம் ஐந்தாறு எடுத்து இரண்டாக
அரிந்து ஒவ்வொன்றாக தேள் கொட்டிய இடத்தில் தேய்த்துக்
கொண்டே இருந்தால் விஷம் நீங்கிவிடும். (ஆதாரம்:”நாட்டு
மருத்துவ மணி நாகம்மா” நூல், பக்கம்
39)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )16]
{30-05-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக