01. அரிநெல்லிக் காய் தினமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் நோய் மட்டுப் படும் (1080)
02. ஆடாதொடை இலைகள் 10 எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை
40 நாட்கள் பருகி வந்தால், எலும்புருக்கி நோய், காசநோய், இரத்தகாசம், சளி ஆகியவை தீரும்.
03. ஆடாதொடை இலையைச் சுத்தம் செய்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் அதிலிருந்து வடிகட்டிய நீரை தினமும் 50 மி.லி சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும். (1078)
04. ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசநோய், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம்.
05. ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து இடித்து சலித்து ஒன்றாகக் கலந்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், சுவாசகாசம், இருமல், சளிச்சுரம், சளி, நரம்பு இழுப்பு, குடைச்சல் ஆகியவை குணப்படும்.
06. சுண்டை வற்றலை சிறிதளவு நல்லெண்ணையில் வறுத்து பொடித்து தினமும்
சாப்பிட்டு வந்தால், காச நோய் (Asthma) மார்புச் சளி, வறட்டு இருமல் ஆகியவை
கட்டுப்படும்.
07. செம்பருத்திப் பூவை எடுத்துச் சுத்தம் செய்து மைய அரைத்து நெல்லிகாய் அளவு உருண்டையாக எடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும். (1079)
08. துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவு சர்க்கரை
கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு,
காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குண்மாகும்.
09. தூதுவேளை இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர என்புருக்கி, காசம், மார்புச்சளி நீங்கும்.
10. தூதுவேளைச் சமூலத்தை (வேர், இலை, பூ, காய்) 50 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை
பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி ஆகியவகை தீரும்.
11. பசுந்தயிர் காச நோயைக் குணப் படுத்தும் வல்லமை உடையது. (1081) (1995)
=========================================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக