மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 6 ஜூன், 2021

சுரம் - பித்த சுரம் (Bilious Fever)

 01.   சீதேவி செங்கழுநீர் செடியை வேருடன் பிடுங்கி வந்து கழுவி சுத்தம் செய்து நீரில் இட்டுக் கழாயம் செய்து சாப்பிட்டால் பித்த சுரம் குணமாகும். (199)


02.   சீந்தில், பற்பாடகம், சந்தனம், விலாமிச்சை, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து, இடித்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு முக்காலும் சுண்டவிட்டு, மீதியை இரண்டு பங்காக்கி, காலை மாலை அருந்த பித்த சுரம் போகும்.


03.   விளாமரத்தின் இலைகளை எடுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து கசாயம் செய்து அருந்தினால் பித்த சுரம் குணமாகும்.  (1646)


 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )23]

{06-06-2021}

==========================================================


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக