01.
அரிவாள் மூக்குப் பச்சிலையை அம்மிக் கல்லில் வைத்து
வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவி, துணிச் சீலைக் கொண்டு அழுத்திக்
கட்டவேண்டும். இதனல் இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும்.
02. அரிவாள்மனைப்
பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய
இரத்தப் பெருக்கு நிற்கும்.
03.
அறுகம் புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக்
கண்ணுக்குள் பிழிய, கண்ணோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும்
குருதியும், காயம் பட்டவிடத்தில் பூச அதிலிருந்து வடியும்
குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ, புண் ஆறி வரும்.
04.
இலந்தை மரத்தின் இலைகலைப் பறித்து வந்து மைய அரைத்து வெட்டு காயத்தின் மீது தடவி வந்தால் காயம் விரைவில் ஆறிவிடும்..(526)
05.
கிணற்றடிப் பூண்டின் இலையை நீர்விடாது அரைத்து வெட்டுக்காயம், சிராய்ப்பு ஆகியவிற்றில்
பற்றிட்டால் சீழ் பிடிக்காமல் விரைந்து ஆறும்.
06.
தேள்கொடுக்கு இலைப்பசையுடன்
தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும். இது தீக்காயம், ஆறாத சீழ் பிடித்த புண்களைக் குணமாக்கும். வெட்டுக் காயத்தையும் குணமாக்கும்.
07.
தேள்கொடுக்கு
செடி, காயங்களை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. வெட்டுக்காயம் சரியாகும். தீக்காயம் வடு இல்லாமல் ஆறும்.
08.
தொட்டாற் சுருங்கி முழுச் செடியை எடுத்து அரைத்து சாறு எடுத்து தினமும் இரு முறை வெட்டுக் காயம் மீது தடவி வந்தால் காயம் குணமாகும்.
09. நந்தியாவட்டைச் செடியிலிருந்து கிடைக்கும்பால் வெட்டுக் காயங்களைக் குணமாக்கும்
10. பிரண்டை எண்ணெய் நெற்றியில் தேய்த்தால் தலைவலி குணமாகும். வெட்டுக் காயம் விரைவாக ஆறும்.
(416)
11. புங்க இலையை மைய அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால், காயம் விரைவில்
ஆறும்.
(527)
12. நாயுருவிச் செடியைப் பிடுங்கி வந்து தழை, தண்டுகளை எல்லாம் ஒரு கல்லின் மேல் இட்டுநன்றாக நசுக்கவும். அதில் அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்துப் பிசையவும். இம்மருந்தைவெட்டுக் காயத்தின்மேல் பூசவும். புண் நன்றாக ஆறிய பின்பு தான் இந்த மருந்துப் பற்று கீழேவிழும். புண் ஆறும் வரை தண்ணீர் படக் கூடாது. ( ஆதாரம்: நாட்டு மருத்துவ மணி நாகம்மா” நூல்”)
13. பிரண்டை எண்ணெய் தேய்த்து வந்தால் வெட்டுக் காயம் சீக்கிரம் ஆறும்.(416)
14.
புங்க மரத்தின் இலைகளைப் பறித்து வந்து மையஅரைத்து வெட்டுக் காயத்தின் மீது தடவி வந்தால் காயம் விரைந்து குணமாகும்.(527)
15.
புளிய மரத்தின் (முற்றிய புளிய மரம்) பட்டையை எடுத்துவந்து இடித்து சலித்து வெட்டுக்காயத்தால் ஏற்பட்டபுண்ணின் மீது தூவ வேண்டும். தூவும் முன் புண்ணை பஞ்சால் துடைத்து சுத்தம் செய்திட வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் சில வெட்டுகாயம் ஆறிவிடும். ( ஆதாரம்: ”நாட்டு மருத்துவ மணி நாகம்மா “ நூல் )
16.
வசம்புத் தூளை வெட்டுக் காயத்தின் மீது தூவி வந்தால் காயம் விரைவில் ஆறும்.
(529) (1164) (1938)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக