01. அகத்திக் கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் இரண்டொரு துளி விட, நான்காம்
முறைக் காய்ச்சல் விலகும்.
02. நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052,விடை(வைகாசி )23]
{06-06-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக