மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 6 ஜூன், 2021

சுரம் - நீர் வேட்கை சுரம் (Thirsty Fever)

 

01.   கானாவாழைச் சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் நீங்கும்; சுரமும் நீங்கும். (192)

 

02.   கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், சுக்கு, பிரண்டை வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி நீரில் போட்டு 125 மி.லி யாகக் காய்ச்சி, காலை மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

 

03.   பேராமுட்டி வேரை நீரில் காய்ச்சி இரு வேளை கொடுக்க காய்ச்சலால் ஏற்படும் தாகம் தீரும். (130) (1818)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,விடை(வைகாசி )23]

{06-06-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக