மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தலை - சொட்டை (Baldness)

 

01.  தலையில் பூச்சி வெட்டு இருந்தால் முடி உதிர்ந்து தலை சொட்டையாகும்.  இது வழுக்கை வகையைச் சேர்ந்தது அல்ல. இதற்குரிய மருந்து அடுத்து சொல்லப்படுகிறது.

 

02.  தலை முடியை முழுவதுமாக மழித்து மொட்டை அடித்திட வேண்டும். மாம்பருப்பை எடுத்து பால்விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்பு சோறு வடித்த கஞ்சி தேய்த்து வெந்நீரில் தலைக் குளிக்க வேண்டும். மறுநாள் மருதாணி இலைச் சாறு ஒரு தம்ளர், வேர் நீக்கிய கரிசலாங் கண்ணிச் செடியின் சாறு ஒரு தம்ளர் இரண்டையும் சேர்த்து வாணலியில்  ஊற்றி நான்கு தம்ளர் எள் எண்ணெய் அல்லது தேங்காயெண்னெய் அத்துடன் சேர்த்து மூன்றில் ஒரு பங்காகக் காய்ச்சி வைத்துக் கொண்டு, தினசரி தலையில் அழுத்தித் தேய்த்து விட வேண்டும். இதனால் தலைச் சொட்டை விலகி முடி வளரத் தொடங்கும். இஃதன்றி, களிமண்னை எடுத்துவந்து நீர் சேர்த்துக் குழம்பாக்கி, தலையில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.  களிமண் குளியல் வாரம் ஒருமுறை மேற்கொள்ள வேண்டும். புதான் தோறும் எலுமிச்சம் பழத்தைத் தலையில் அழுத்தித் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சோப்பு, சீயக்காய் கூடாது. களிமண் குளியல், எலுமிச்சம்பழச் சாறு குளியல் நாட்களில் மருந்து எண்ணெய் தலைக்குத் தேய்க்கக் கூடாது.  மற்ரநாட்களில் மருந்து எண்ணெய் தவறாமல் தேய்க்க வேண்டும். மூன்று மாதங்களில் முடி வளர்ச்சி பிரமிப்பை ஊட்டும். (ஆதாரம் : “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி )17]

{01-07-2021}

==========================================================

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக