மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 6 ஜூலை, 2021

தோல் - தேமல் (Chiloasma)

 

01.   எலுமிச்சங் காய்கள் இரண்டு எடுத்துச் சாறு பிழிந்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்துக் கலக்கி அதை ஒரு விரலால் தொட்டு தேமலின் மேல் பூச வேண்டும் நாள்தோறும் மூன்று வேளை வீதம் பன்னிர்ண்டு நாள் இவ்வாறு செய்து வந்தால் தேமல் குணமாகி விடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

02.   கமலா ஆரஞ்சுத் தோலை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து தினமும் உடம்பிற்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தேமல் நீங்கிவிடும்.(1001)

 

03.   கொன்றைப் பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி, கரப்பான் ஆகியவை நீங்கும். பூவைக் குடிநீரிட்டு உட்கொள்ள, வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

 

04.   சாதிக் காயுடன் நாயுருவி இலைகளை எடுத்து மை போல் அரைத்து தேமலின் மேல் தடவி வந்தால் தேமல்கள் மறையும்.(1009)

 

05.   திப்பிலிப் பொடி அரை தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் சப்பிட்டு வந்தால் தேமல் நீங்கும்.

 

06.   துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து தேமல், படை மீது பூசி வந்தால், அவை விரைவில் நீங்கும்.

 

07.   நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வந்தால் தேமல், படை முதலியவை நீங்கும்.

 

08.   நாயுருவி இலையுடன் ஜாதிக் காய் சேர்த்து  மைபோல் அரைத்து தேமல் மீது  தடவி வந்தால், தேமல் மறைந்து விடும்.(1009)

 

09.   பூவரசங் காயை எடுத்துக் கல்லின் மேல் உரசினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். அந்தப் பாலை விரலால் தொட்டு தேமலின் மேல் பூச வேண்டும். இவ்வாறு பத்து நாள் காலை, மதியம், மாலை என தினமும் மூன்று வேளைகள் தொடர்ந்து செய்தால் தேமல் அடியோடு மறைந்து விடும். (ஆதாரம்: “நாட்டு மருத்துவ மணி நாகம்மாநூல்)

 

10.   மணித்தக்காளி இலைச் சாறை தேமல், சொறி, சிரங்கு, புண்கள் மேல் தடவி வரலாம். நிவாரணம் தரும். மணித் தக்காளி இலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால், உடல் பருக்கும்.

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]

{06-07-2021}

==========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக