மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 1 ஜூலை, 2021

தோல் - அரிப்பு.

 

01.   உத்தாமணி இலைகளை எடுத்துக் கசக்கி அரிப்பு, தடிப்புகளுக்குத் தடவினால் அவை சரியாகும்.(1020)

 

02.   உத்தாமணி இலைகளை எடுத்து சாறு பிழிந்து உடலில் தடவி சற்று நேரம் கழித்துக் குளித்தால் உடலில் ஏற்படும் ஊறல் அரிப்பு குணமாகும்(1027)

 

03.   கீழாநெல்லி இலைகளைப் பறித்து வந்து நீர் விட்டு அரைத்து உடம்பில் பூசி, ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால், உடல் அரிப்பு, சிறு புண்கள் ஆகியவை நீங்கும். (1015) (1950)

 

04.   சரக்கொன்றை இலைகளை பறித்து வந்து நீர் விட்டு மைய அரைத்து அரிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் ஊறல், அரிப்பு ஆகியவை நீங்கும்.(440) (1156)

 

05.   பூவரசு பழுப்பு இலைகளை வெயிலில்காய வைத்து கருக்கி அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவினால் ஊரல், அரிப்பு ஆகியவை குணமாகும்.  (1493)

 

06.   நிலவேம்பு இலைகளை அரைத்துப் பற்றிட்டால் உடலில் ஏற்படும் அரிப்புகள் சரியாகும்.

 

07.   மண்புழு போன்ற தோற்றமளிக்கும் சிறு பாம்பின் கடிக்கும், அரிப்பு, தடிப்பு போன்றவைகட்கும் உத்தாமணி இலைச் சாற்றைத் தடவலாம்.

 

08.   வன்னி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் (30 மி.லி) சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.(419) (438)

 

09.   வெள்ளருகு சமூலம் எடுத்து சுத்தம் செய்து அரைத்து வெந்நீரில் கலந்து உடல் முழுதும் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் சிரங்கு, ஊறல் குணமாகும். (1589)

 

10.   வேப்பமரத்துப் பட்டைகளை எடுத்து வந்து இடித்துத் தூளாக்கி, சிறிது நீரில் குழைத்துப் பூசி 30 நிமிடம் கழித்துக் குளித்தால், உடல் அரிப்பு, நமைச்சல், தடிப்பு ஆகியவை  நீங்கும். (998)

 

11.   வேலிப் பருத்தி ( உத்தாமணி ) இலைகளைப் பறித்து வந்து அரைத்து உடம்பில் தடவி வைத்திருந்து சிறிது நேரம் கழித்துக் குளித்து வந்தால்  உடல் அரிப்பு, தடிப்பு ஆகியவை நீங்கும். (1020) (1027)



==================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052,ஆடவை(ஆனி)17]

{01-07-2021} 

==================================================


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக