மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 7 ஜூலை, 2021

பல் - துலக்க உகந்தவை (Tooth Brushing)

 

01.   எலியாமணக்கின் இளங் குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

 

02.   கருவேலம் பட்டை பொடி செய்து, பல் துலக்கி வந்தால், பல் சம்பந்தமான நோய்கள் வராது. (248)

 

03.   நாயுருவி வேர் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது (231) (827)

 

04.   பாக்குக் கொட்டையைச் சுட்டு, சாம்பல் ஆக்கி, அதனுடன் காசுக்கட்டி, இலவங்கப் பட்டை சேர்த்து அரைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் வராது.(244)

 

05.   பிராயன் மரப்பட்டையில் தைலம் செய்து அதில் சுக்கு, கடுக்காய், அரப்பொடி சமமாகக் கலந்து மெழுகுபோல் அரைத்து பல் தேய்த்து வந்தால், அனைத்து விதமான பல் நோய்களும் குணமாகும்.(232)

 

06.   பூந்திக் கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து, பற்பொடியில் சேர்த்துப் பல் துலக்கி வந்தால், பல் நோய்கள் வராது.(240)

 

07.  கறிவேம்புக் குச்சிகள் (கறிவேப்பிலைச் செடியின் குச்சிகள்) கொண்டு பல் துலக்கினால் ஈறுகள் வலிமை அடையும். பற்கள் வெண்மை பெறும்.

 

08.   காட்டாமணக்கு இளங் குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

 

09.   சிவனார் வேம்பு என்னும் மூலிகைச் செடியின் வேரால் பல் துலக்க, பல்வலி தீரும்(1664)

 

10.   நாயுருவி வேரால் பல் துலக்கி வந்தால், பல் தூய்மை ஆவதுடன் முகமும் வசீகரம் ஆகும்.  (231)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, ஆடவை (ஆனி )23]

{07-07-2021}

 

==========================================================


 

2 கருத்துகள்: